முதுமையை தள்ளிபோட்டு ஆயுளை கூட்டும் சதாவரி மூலிகை!

முதுமையை தள்ளிபோட்டு ஆயுளை கூட்டும் சதாவரி மூலிகை! 

ஆயுர்வேத மூலிகையில் சதாவரி என்பது 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது. இயற்கை மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் முலிகை. இது ஆயுர்வேதம் படி மனம், உடல் மற்றும் ஆவி மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது
 
ஆயுர்வேதத்தில் சதாவரி என்றால் என்ன? எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று பார்க்கலாம்.

சதாவரி என்பது அடாப்டோஜெனிக் மூலிகை.இந்த கூற்றுக்களை ஆதரிக்க அதிக அறிவியல் ஆராய்ச்சி இல்லை என்றாலும் அடாப்டோஜெனிக் மூலிகைகள் ஹைபோதாலமிக் பிட்யூட்டரி மற்றும் அட்ரீனல் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகின்றன இது உடல் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது.

மூலிகைகளின் ராணி என்று சதாவரி அழைக்கப்படுகிறது. இது சக்தி வாய்ந்த கருவிகளில் ஒன்று என்றாலும் புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இவை எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

பெண்களுக்கு சதாவரி :

சதாவரி வேர்கள் தாய்ப்பாலை சுரக்க தூண்டப்பட சிகிச்சையளிக்க உதவுகிறது.

சதாவரி பட்டையின் சாறு பாலுடன் கலந்து பெண்களுக்கு குடித்துவந்தால் இனப்பெருக்க மண்டலம் வலுப்படுத்தலாம். குறிப்பாக கோனேரியா என்னும் தொற்று காலத்தில் அதி சரி செய்ய இவை உதவும்.

அதிக இரத்தபோக்கு மற்றும் வீக்கம் குறைக்க சதாவரி பயன்படும். மாதவிடாய் காலங்களில் அதிக பிடிப்புகள் இருந்தால் மாதவிடாய் வருவதற்கு 5 நாட்கள் முன்பு இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு சதாவரி பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்பிடிப்பு குறையும்.

மாதவிடாய் நின்ற பிறகு பெண்களின் எலும்புகளில் கால்சியத்தை அதிகரிக்க இவை உதவுகிறது.

வயிற்றுப்போக்கு :

சதாவரியின் வேர்களை எடுத்து உலர்ந்தது அல்ல ஃப்ரெஷ்ஷாக எடுத்து அதை நீரில் வேகவைத்து வடிகட்டி கால் டம்ளர் அளவு எடுத்து, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இது வயிற்றுப்போக்குக்கு தீர்வாக இருக்கும். இது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது மற்றும் கேண்டிடா தொற்று தடுக்க உதவுகிறது.

சிறுநீரக கோளாறு :

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

கரும்புச்சாறுடன் சதாவரி பொடி சேர்த்து நாள் ஒன்றுக்கு ஒரு முறை குடித்து வந்தால் சிறுநீர்ப்பெருக்கியாக செயல்படுகிறது. உடலில் இருக்கும் அதிக திரவத்தை வெளியேற்றுகிறது.

வயிற்றுப்புண் :

அதிக அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்க சதாவரி மூலிகையின் சாற்றை உட்புறமாக எடுத்துகொள்ளுங்கள். சதாவரி வேரை பொடி செய்து சாறு தயாரித்து புண்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது பெருங்குடல் அழற்சியின் அறிகுறிகளை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த சதாவரி மூலிகை வெண்புள்ளி நோய் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும். இந்த சதாவரி இலைகளை வேகவைத்து வாத நோய் மற்றும் இருமல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

வளரும் பிள்ளைகளுக்கு சதாவரி :

குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்க, அரை டீஸ்பூன் சதாவரி பொடியுடன் சம விகிதத்தில் நெய் மற்றும் தேன் கலந்து கொடுக்கலாம். வயதானவர்கள் சதாவரி பொடியை பசும்பால் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் கிடைக்கும். புத்துணர்ச்சியாக உணர்வார்கள்.

குழந்தைகள் எடை அதிகரிக்கவில்லை என்றால் பாலுடன் சதாவரி பொடியை கலந்து தினமும் இரண்டு வேளை கொடுத்துவந்தால் குழந்தைகளின் எடை அதிகரிக்கும். இளம் வயதினருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

சதாவரி மூலிகை நரம்பு கோளாறுகள் டிஸ்பெசியா மற்றும் நரம்பியல் ஆகியவற்றில் ஊட்டமளிக்கும் மற்றும் பாதுகாக்கும். இது முதுமையை தள்ளிபோடுவதுடன் ஆயுளை அதிகரிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். மன ஆரோக்கிய செயல்பாட்டை மேம்படுத்தலாம். உடலின் உயிர்சக்தியை மீட்டெடுக்கவும், புற்றுநோய் தடுக்கவும் இந்த மூலிகை உதவும்.