மருந்தில்லா மருத்துவம்

மருந்தில்லா மருத்துவம்

  இரவு வேளையில் தூங்குவதற்கு முன்பாக இரண்டு உள்ளங்கால்களிலும் நல்லெண்ணெய்யை தடவி வர கண் எரிச்சல் நீங்கும் கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கும்

   காதுகள் இரண்டிலும் இரண்டு துளிகள் வீதம் இரண்டு நாட்களுக்கு ஒரு தரம் நல்லெண்ணெயை விட்டு வர தலையில் ஏற்படும் எந்த நோயும் நம்மை நெருங்காது உடலின் வெப்பம் வெகு எளிதாக தணிந்து விடும்

  இரவு படுத்து உறங்குவதற்கு முன்பாக கண்கள் இரண்டிலும் இரண்டு துளிகள் வீதம் நல்லெண்ணெயை விட்டு வர கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும்

  கண்கள் மற்றும் காதுகளில் ஏற்படும் நோய்கள் நம்மை நெருங்காது

இரண்டு மூக்குத் துவாரங்களிலும் இரண்டு துளிகள் வீதம் நல்லெண்ணெயை விட்டு வர சளித்தொல்லை நீங்கும் மூக்கடைப்பு ஏற்படாது சுவாசத் தொந்தரவு விலகும்

  தொப்புள் மீது நல்லெண்ணெய் கொஞ்சம் விட்டு வர வயிற்றுவலி நீங்கும் மேலும் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் உடலில் ஏற்படாத வண்ணம் நம்மை காக்கும் 

   தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெண்ணீர் வைத்து குளித்து வர உடல் சூடு தணியும் 

உடல் வலிகள் நீங்கும் 
உடலுக்கு வனப்பும் அழகும் ஏற்படும் தோல் மென்மையடையும் உடல் சோர்வு நீங்கும் உடலில் அசதி ஏற்படாது

வாத பித்த சிலேத்துமம் எனும் முக்குணங்களை  சமநிலைப்படுத்தி நோயிலிருந்து நம்மை காக்கும்

பொதுவாக எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால் எப்பொழுதும் கிழட்டுத் தன்மை உடலில் தோன்றாது தோலில் சுருக்கம் விழாது இளமையும் அழகும் என்றும் குறையாது

இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள் எண்ணை தேய்த்து குளித்து வந்தால் ஆனந்தமாக தூக்கம் வரும்

  எண்ணெய் தேய்த்து குளிக்கும் பொழுது மலவாய் முதல் பிறப்புறுப்பு வரை உடலின் அனைத்து பாகங்களிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடல் வெப்பம் தணிந்து உடலின் வெட்டை  தன்மை நீங்கி உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும்

  சுருக்கமாகச் சொன்னால்

               எல்லா நோய்களும் நீங்க 
            எண்ணெய் தேய்ச்சு குளிங்க