கல்லீரல் நோய் வராம இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க!

கல்லீரல் நோய் வராம இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க! 

உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உறுப்பு கல்லீரல். இது உடலில் இருக்கும் நச்சுகளை நீக்குகிறது மற்றும் உடலுக்கு தேவையான பல முக்கிய ஊட்டச்சத்துக்களை சேமிக்கிறது. பித்தத்தை உண்டாக்கும் கல்லீரல் செரிமானத்துக்கு உதவுகிறது.

இந்த கல்லீரல் நோய்கள் வைரஸ்களால் ஏற்படலாம். இவை ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் பி மற்ற வகை கல்லீரல் நோய்கள் காரணமாக இருக்கலாம். புற்றுநோய், மரபியல் அல்லது மது அல்லது போதைபொருளின் அதிகப்படியான நுகர்வு, அதிகப்படியான கொழுப்பு போன்றவை கல்லீரலில் பாதிப்பை உண்டாக்கலாம். மேலும் மஞ்சள் காமாலை, இரத்த நோய்கள் போன்ற அடிப்படை காரணங்களாலும் இவை பாதிக்கப்படலாம். மேலும் கல்லீரல் கோளாறுகள் தொற்றுகள் அல்லது மருந்து பயன்பாட்டிலும் வரலாம்.

கல்லீரல் கோளாறுக்கான அறிகுறிகள் :

சோம்பல், அமிலத்தன்மை, பசியின்மை மற்றும் மேல் வயிற்று வலி மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக இருப்பது போன்றவை கல்லீரல் கோளாறுக்கான முதல் அறிகுறியாகும்.

நெல்லிக்காய் :

ஆயுர்வேதம் கல்லீரல் சிகிச்சைக்காக நெல்லிக்காயை பரிந்துரைக்கிறது. இது வைட்டமின் சி நிறைந்த ஊட்டச்சத்து. தினசரி உணவில் நெல்லிக்காயை வைத்திருப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு எடுக்கலாம். நெல்லி துண்டுகளை மென்று சாப்பிடலாம். சாலட்கள் உணவுகள், தயிரில் சேர்த்து எடுக்கலாம்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆன் டி ஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளது. கல்லீரல் குளுதாதயோன் எனப்படும் நொதிகளை உற்பத்தி செய்கிறது. குளுதாதயோன் நச்சுக்களாஇ வெளியேற்றுகிறது. எலுமிச்சை கல்லீரலை நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது. எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் நீரில் கலந்து நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முறை பல வாரங்கள் குடிக்கலாம்.

மஞ்சள் :

இது கொழுப்புகளை ஜீரணிக்க உடலின் திறனை மேம்படுத்துகிறது. கல்லீரலில் கொழுப்புகள் தேங்காமல் பார்த்துகொள்கிறது. கல்லீரல் நச்சுத்தன்மை செயல்முறைக்கு உதவுகிறது. ஒரு டம்ளர் தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு வாரங்கள் வரை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை எடுக்கவும்.

பப்பாளி :

ஆயுர்வேதத்தின் படி பப்பாளிப்பழம் மற்றும் அதன் விதைகள் இரண்டும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு பயனுள்ள சிகிச்சையாகும். கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்துவதில் பப்பாளி உதவும். பழுத்த பப்பாளியை ஒரு துண்டு தேனுடன் தினமும் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரலின் செயல்பாட்டுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பப்பாளி பழச்சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.குறிப்பாக சிரோசிஸ் நோய்க்கான தீர்வாக இருக்கும். பப்பாளி விதைகளை சாறு எடுத்து எலுமிச்சை சாறுடன் சாப்பிடவும்.

இலவங்கப்பட்டை :

மசாலாவில் சிறந்தது இது. கல்லீரலில் என்சைம்களின் உற்பத்திக்கு இது உதவுகிறது. அது கல்லீரல் செல்களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கலாம். இலவங்கப்பட்டை தேநீர் காலையில் குடிப்பது மிக நல்லது.

பூண்டு :

பூண்டு பல உடல்நல கோளற்றுகளுக்கு உதவும் ஒரு அதிசய உணவு. இது கல்லீரலுக்கும் உதவும். பூண்டில் அதிக செலினியம் இருப்பதால் பூண்டு கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. பூண்டு உடலை நச்சு நீக்குகிறது மற்றும் கல்லீரல் நொதிகளை செயல்படுத்த உதவுகிறது.

வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பல் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவிலும் இதை சேருங்கள். பச்சை பூண்டை உட்கொள்வது சிரமம் என்றாலும் இதை அதிகமாக உணவில் சேர்ப்பது நன்மை பயக்கும்.

பால் நெருஞ்சி

இந்த மூலிகை கல்லீரல் ஆரோக்கியத்துக்கு நல்ல தீர்வாக இருக்கும். இது சிரோசிஸ் சிகிச்சை மற்றும் ஹெபடைடிஸ் நோய்த்தொற்றுகளிலும் உதவுகிறது. அரைத்த பால்நெருஞ்சி விதைகளிலிருந்து தேநீரை காய்ச்சி தினமும் கொடுக்கவும். இது கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. உணவுக்கு பிறகு பால் நெருஞ்சி பவுடர் மட்டும் எடுங்கள்.

அவகேடோ :

இந்த கொழுப்பு நிறைந்த உணவு குளுதாதயோன் உற்பத்திக்கு உதவுகிறது. இது கல்லீரலில் இருக்கும் நச்சு நீக்குகிறது. இதை சிற்றுண்டியாக சாப்பிடுங்கள். அல்லது சாலட்களில் பயன்படுத்துங்கள். இனிப்புகளிலும் சுவைக்கு பயன்படுத்தலாம்.

ஆப்பிள் :

ஆப்பிள்களில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதன் மூலம் கல்லீரலின் பணிச்சுமை குறையும். இரவு உணவுக்கு பிறகு ஆப்பிளை சேருங்கள். அல்லது வாரத்துக்கு 2-3 முறையாவது ஆப்பிள் சாறு குடிக்கலாம். இது கல்லீரல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவும்.ஆப்பிள் நுகர்வு அதிகரிக்க சாலட்டுகள் மற்றும் இனிப்புகளில் பயன்படுத்தவும்.

உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் :

° ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆளிவிதைகள் அளவாக எடுக்கவும்.

° கோதுமை மாவு சேர்க்கலாம்.

° சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை எடுப்பதை குறைக்கவும்.

° முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் மற்றும் புதிய இலை கீரைகள் போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள்.

° மோர் மற்றும் சிட்ரஸ் பழச்சாறுகள் குடிக்கவும்.

° போதுமான தண்ணீர் எடுத்துகொள்ளுங்கள்.

° ஆல்கஹால் மற்றும் சிகரெட் தவிர்க்கவும்.

° உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்.