உப்பை நேரடியா சமையல்ல சேர்த்தா ஆபத்தாம், இப்படிதான் சேர்க்கணுமாம்,

உப்பை நேரடியா சமையல்ல சேர்த்தா ஆபத்தாம், இப்படிதான் சேர்க்கணுமாம், 

உப்பு சுவையானது கைப்பு என்று சொல்லலாம்.இது கசப்பு மற்றும் துவர்ப்பு சேர்ந்த சுவை என்று சொல்லலாம். இந்த சுவையை மண்களுக்கு அடியில் கிடைக்கும் காய்கறிகள், வெங்காயம், தானியங்களை பச்சையாக எடுக்கும் போது, மண்ணுக்கு கீழ் இருக்கும் தண்ணீரிடமிருந்து உப்பு இயற்கையாகவே பெறலாம் என்கிறார் மரபு உணவு, வாழ்வியல் ஆலோசகர் நல்ல சோறு இரா. இராஜமுருகன்.உப்பு குறித்து அவர்ந்து பகிர்ந்துகொள்ளும் குறிப்புகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

உப்பு உடலுக்கு தேவை என்று தினசரி அவரவர் வயதுக்கேற்ப எவ்வளவு வரை எடுக்கலாம் என்பதை பரிந்துரைக்கிறார்கள். உப்பில் இருக்கும் சோடியம் குளோரைடு நமக்கு காய்கறிகளிலேயே கிடைக்க கூடியவை. ஆனால் சுவைக்காக இதை சேர்க்க பயன்படுத்தி பழகி விட்டோம். இப்போது நாவில் சுவை ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் எல்லா வகை உணவுகளிலும் உப்பு இடம் பெற்று விடுகிறது.

கடலிலிருந்து பெறக்கூடிய உப்பு சோடியம் மற்றும் இன்னும் பிற கண்டுபிடிக்க கூட முடியாத நுண்ணூட்டங்களை கொண்டிருக்கலாம். உப்பு மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது சமையலில் சுவை சேர்க்க கூடிய நீக்கமற பொருளாக உப்பை பயன்படுத்தி வருகிறோம்.

உப்பு பயன்படுத்துவதற்கு முன்பு அதில் இருக்கும் நச்சுக்களை நீக்குவது அவசியம். கல் உப்பை பயன்படுத்துவதற்கு முன்பு இரும்பு அல்லது மண் சட்டியில் கல் உப்பை கொட்டி சிவக்க வரும் வரை வைத்து வறுத்தால் அதில் இருக்கும் நச்சு நீங்கும். அதனால் தான் கல் உப்பை வறுத்து சேருங்கள் என்று சொல்வது. பாரம்பரியமாக நம் முன்னோர்கள் உப்பை வறுத்துதான் பயன்படுத்தி வந்தார்கள்.

கல் உப்புடன் முருங்கை கீரை இலையை சேர்த்து வறுக்கலாம். இதனால் உப்பின் நச்சு நீக்கப்படும். முருங்கை இலையை மட்டும் தனியே நீக்கி உப்பை பதப்படுத்தி வைத்து பயன்படுத்தலாம்.

நற்சங்கு இலை என்று மூலிகை ஒன்று உண்டு. இதன் இலைகள் முட்களோடு இருக்கும். இது சங்க இலை என்றும் அழைக்கப்படுகிறது. முட்களோடு இருக்கும் கொழுந்து பகுதியை மட்டும் எடுத்து உப்புடன் சேர்த்து வறுத்து அந்த கொழுந்தை நீக்கி பயன்படுத்தினால் நச்சில்லாமல் இருக்கும்.

கல் உப்பை சுத்தம் செய்யும் எளிமையான முறை ஒன்று உண்டு என்றால் அது இந்த முறை தான். இரவு படுக்கைக்கு செல்வதற்கு கல் உப்பை தண்ணீரில் ஊறவிடவும். மறுநாள் காலை அதை வடிகட்டாமல் மேலாக ஈர்த்து சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். தினமும் இப்படி கல் உப்பை நீரில் கரைத்து அந்த தண்ணீரை பயன்படுத்துவது சிரமமாக இருந்தால் மொத்தமாக கல் உப்பை நீரில் ஊறவைத்து மேலாக எடுத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவையான போது பயன்படுத்தலாம். இந்த முறை எளிதானது மட்டும் அல்லாமல் உப்பின் பக்கவிளைவுகள் இல்லாமல் செய்யகூடியதும் கூட. இனி உப்பை பயன்படுத்தும் போது இந்த முறையை செய்யுங்கள்.

முன்பு கல் உப்பு மட்டும் தான் இருந்தது. சமையலுக்கு பயன்படுத்தியது போக தூள் வடிவில் தேவையாக இருந்தாலும் கல் உப்பை மசித்து தான் பயன்படுத்துவார்கள். தற்போது டேபிள் சால்ட் வடிவில் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இது ப்ளீச் செய்த சோடியம் குளோரைடு. இதில் கயப்பு சுவை இருக்கும். இதில் இருக்கும் நுண்ணூட்டங்கள் முழுமையாக இருக்குமா என்பது குறித்தும் சொல்ல முடியாது. இதை அளவாக பயன்படுத்தினால் கூட அது உங்களுக்கு நன்மை பயக்குமா என்பது சந்தேகம் தான்.

கடல் உப்பில் மைக்ரோ பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பது அதிகரித்துவருகிறது. இவை உப்பின் மருத்துவ குணங்களில் சில மாற்றங்களை உண்டு செய்யலாம் என்றாலும் இதை தவிர்க்க முடியாது. ஆனால் மேஜை உப்பு என்று சொல்லகூடிய அயோடிஸ் செய்யப்பட்ட உப்புத்தூளை வெண்மையாக்க ப்ளீச் செய்யப்படுகிறது. இது நேரடியாக இரசாயனக்கலப்பு என்பதால் இது தீங்கு விளைவிக்க கூடியது. உப்பை சரியாக பயன்படுத்துவதாக இருந்தால் தண்ணீரில் கலந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கடலிலிருந்து நேரடியாக உப்பு பெறும் போது வறுத்து பயன்படுத்துவது பயனளிக்கும். இந்த முறைகளை கூட கடலிலிருந்து உப்பு எடுத்து பயன்படுத்திய பிறகு அதில் வந்த பிரச்சினைகளுக்கு தீர்வாகவே நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் உப்பு உண்டாக்கும் அரிப்பு பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு உப்பின் குணங்கள் காரணமாக இருந்ததால் கூட உப்பு பயன்படுத்தும் முறையை அவர்கள் வகுத்திருக்கலாம்.

இப்போது ராக் சால்ட் பயன்பாடும் அதிகரித்துவருகிறது. இதையும் நீரில் கரைத்து பயன்படுத்தலாம். உப்பு நல்லது தான். ஆனால் அளவாக பயன்படுத்தினால் இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கவே செய்யும்.