மஞ்சளுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுங்க.. இந்த நோய்கள் எல்லாம் கிட்ட கூட நெருங்காதாம்!!

மஞ்சளுடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுங்க.. இந்த நோய்கள் எல்லாம் கிட்ட கூட நெருங்காதாம்!!

அன்றாடம் நம் சமையலுக்கு பயன்படுத்து மஞ்சளில் எண்ணற்ற மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

ஆயுர்வேத சிகிச்சைகளில் மஞ்சள் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாக இருக்க காரணம் அதன் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு குணங்கள் தான்.

அந்த வகையில் மஞ்சளுடன் மிளகு இணையும்போது அது ஆரோக்கிய பிரச்சினைகளை குணப்படுத்தக் கூடும்.

மஞ்சள் மற்றும் மிளகை சேர்த்து சாப்பிடும்போது உடல் ஆரோக்கியத்தில் என்னென்ன மாற்றங்களை என்பதை பார்ப்போம்.

மிளகு மற்றும் மஞ்சள் கலந்த கலவையில் அதிக அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் சருமத்தில் ஏற்படும் பல பாதிப்புகளை குணப்படுத்த உதவும். சருமத்தையும் பொலிவுற செய்யும்.

மஞ்சளுடன் மிளகு சேரும்போது அது எலும்புகளில் ஏற்படும் வலியை குறைக்கும், குறிப்பாக ஆர்திரிடிஸ் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் பொருள் புற்றுநோய் செல்களை அழிப்பதோடு மஞ்சளின் புற்று நோய்க்கான எதிர்ப்பு பண்பு மார்பக புற்று நோய் செல்கள், பெருங்குடல் புற்று, நோய் செல்கள் மற்றும் லுக்கேமியா புற்றுநோய் செல்கள் போன்றவற்றை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளுடன் மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து சூடான நீரில் கலந்து தினமும் காலையில் குடிப்பது உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகளை குறைப்பதோடு உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் செய்யும்.

மஞ்சளுடன் மிளகு சேர்த்து சாப்பிடுவது கொழுப்புகளின் அளவை குறைக்கவும், பருமனை குறைக்கும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் மிளகில் உள்ள பைபரின் என்ற பொருளும் உங்கள் இரத்த நாளங்களின் மீது உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும்.

மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிடுவது உங்கள் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்.
மஞ்சள் மற்றும் மிளகு இரண்டும் வீக்கத்தை குறைக்கவும், மூட்டுவலி போன்ற பிரச்சினைகளை குணப்படுத்துகின்றது.

மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஈரல் செல்களை சேதப்படுத்தும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற பயன்படுகிறது.

மிளகில் உள்ள குளுதாதயோனின் ஈரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இது ஈரலில் உள்ள செல்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

மஞ்சள் மற்றும் மிளகு இரண்டிலுமே உள்ள மருத்துவ குணங்கள் குடலில் உள்ள நொதிகளின் செரிக்கும் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதன்மூலம் உணவு செரிமானம் அடையும் நேரம் மிகவும் குறைக்கப்படும். குடலில் வீக்கங்களை குறைக்க உதவுகின்றது.

மஞ்சள் மற்றும் மிளகு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். இது உங்கள் மூளையில் ஏற்படும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் இது நினைவாற்றலை ஊக்குவிக்கவும் உதவும்.

மஞ்சள் மற்றும் மிளகு இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது மனஅழுத்தத்தை குறைக்கும் செரோடோனின் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோனான டோபோமைனின் சுரப்பையும் அதிகரிக்கிறது.