பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்க இந்த ஒரே ஒரு வழி போதும்….

பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்க இந்த ஒரே ஒரு வழி போதும்….
 
வாய் விட்டு நிம்மதியாக சிரிக்க விடாமல் தடுக்கும் பற்களின் மஞ்சள் கறையைப் போக்க வீட்டிலேயே எளிய வழிகள் உள்ளது.

இதன் மூலம் பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க முடியும்.

இது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
டூத் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
அலுமினியத்தாள்

செய்முறை :

ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து அந்த கலவையை இரண்டு துண்டு அலுமினியத் தாளின் மீது தடவ வேண்டும்.

பின் ஒரு துண்டை மேல் பற்களின் மீதும், மற்றொன்றை கீழ் பற்களின் மீதும் வைக்க வேண்டும்.

2 நிமிடம் கழித்து, அலுமினியத்தாளை நீக்கி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

எஞ்சிய கலவையைக் கொண்டு, மீண்டும் பற்களை கை விரலால் துலக்கி, நீரால் வாயை கொப்பளியுங்கள். முக்கியமாக ஒருமுறை இந்த கலவையைத் தயாரித்தால், அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். மறுநாளைக்கு வைத்து பயன்படுத்தக்கூடாது.