இப்படி 5 விதமான நீரை குடித்தால் போதும்: சட்டென்று குறையும் உடல் எடை!!

இப்படி 5 விதமான நீரை குடித்தால் போதும்: சட்டென்று குறையும் உடல் எடை!!

இந்த காலத்தில் உடல் பருமன் மக்களின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. உடல் பருமன் ஒரு நோயல்ல, ஆனால் இது பல வித நோய்களுக்கு ஆதாரமாக மாறக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை குறைக்க அனைவரும் முயற்சி செய்கிறார்கள். 

அலுவலகத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்வதால் உடல் எடை வேகமாக அதிகரிக்க துவங்கி விடுகிறது. இது தவிர, தாமதமாக தூங்குவது, இரவில் தாமதமாக சாப்பிடுவது, துரித உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் உட்கொள்வது போன்றவையும் எடையை அதிகரிக்கின்றன. 

உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கிறது. ஆனால், அதைக் குறைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். எந்த தொந்தரவும் கடின உழைப்பும் இல்லாமல் எடையை எளிதாகக் குறைக்க அனைவரும் விரும்புகிறார்கள். 

எந்த வித கடின வேலையையும் செய்யாமல் உடல் எடையை குறைக்கும் வழியை இந்த பதிவில் காணலாம். இதற்கு நீங்கள் தினமும் காலையில் பல்வேறு வகையான தண்ணீரைக் குடித்தால் போதும். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். 5 நாட்களுக்கு வெவ்வேறு எடை இழப்பு தந்திரங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை குடிப்பதால் உடல் பருமன் குறைவதுடன் வாயு, அஜீரணம், செரிமானம், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளும் நீங்கும்.

வெந்தய நீர்:

வெந்தயம் ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக வெந்தய நீர் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயல்முறையை குறைக்கிறது. 

வெந்தயத்தில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் அமினோ அமிலங்கள் உள்ளன. உடல் எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்கள் தினமும் காலையில் வெந்தய நீரை அருந்த வேண்டும். 1 டீஸ்பூன் வெந்தயத்தை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.

பெருஞ்சீரக தண்ணீர்:

பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதால் எடை குறைகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது வயிறு மற்றும் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. பெருஞ்சீரக தண்ணீர் குடிப்பதன் மூலமும் இன்சுலின் அளவு கட்டுப்படும். 

இதனால் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது. பெருஞ்சீரக தண்ணீரை குடிப்பதன் மூலம் வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையும் நீங்கும். இதற்கு 1 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த நீரை காலையில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடிக்கவும்.

எலுமிச்சைப்பழ நீர்:

எலுமிச்சை நீர் எடை இழப்புக்கு எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள தீர்வாகும். தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, எடை வேகமாக குறைகிறது. எலுமிச்சைப் பழத்தில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது. 

இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் போன்றவற்றிலிருந்து உங்களை காக்கும். நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், கண்டிப்பாக தினமும் காலையில் எலுமிச்சைநீரை குடிக்கவும். எலுமிச்சை சாற்றை வெந்நீரில் சேர்த்து குடிக்கவும்.

சீரக நீர்:

சீரகத் தண்ணீர் உடல் எடை குறைக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் சீரக நீரை குடித்து வந்தால், சில நாட்களில் உடல் பருமன் குறையும். சீரக நீர் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். ஜீரணம் தொடர்பான பிரச்சினைகளும் சீரக நீரை தினமும் குடித்து வந்தால் தீரும். இதற்கு, 1 கிளாஸ் தண்ணீரில் 1 தேக்கரண்டி சீரகத்தை சேர்த்து இரவு முழுவதும் விட்டு விடுங்கள். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி குடிக்கவும்.

ஓமம் தண்ணீர்:

ஓமம் போட்ட தண்ணீரைக் குடிப்பது எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஓமத்தில் கால்சியம், தியாமின், ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் நியாசின் ஆகியவை உள்ளன, இது உங்கள் எடையைக் குறைக்க உதவுகிறது. ஓமம் வயிற்றுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதற்கு 1 டீஸ்பூன் ஓம விதைகளை 1 கிளாஸ் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி குடிக்கவும்.