ஆரோரூட் மாவை தொடர்ந்து சூடு தண்ணீரில் கலக்கி குடித்து வந்தால்...

ஆரோரூட் மாவை தொடர்ந்து சூடு தண்ணீரில் கலக்கி குடித்து வந்தால்...

ஆரோரூட் எனப்படும் கூகைக் கிழங்கு இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்ட வெப்பமண்டல கிழங்கு. பொதுவாக இந்த கிழங்கு பவுடராக பயன்படுத்தப்படுகிறது. இது அரோரூட் மாவு என்றும் அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய 70 ஆயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல இடங்களில் இந்த ஆரோரூட் கிழங்கை மக்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக பயன்படுத்தியுள்ளார்கள்.

கூகைக் கிழங்கு பச்சையாக கிடைக்கும் இடத்தில் வாங்கி அதை வேக வைத்து சாப்பிடுவார்கள். நிலத்தின் அடியில் வளரும் இந்த கிழங்கிலிருந்து ஆரோரூட் மாவு தயாரிக்கப்படுகிறது. புரோட்டின் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் கொண்ட இந்த கூகைக் கிழங்கு ஜீரணிக்க மிகவும் எளிதானது. மென்மையான உணவை கொடுக்கும் பருவத்தில் இருக்கும் சிறிய குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இது ஏற்ற ஒரு உணவு.

இது பிறப்பு குறைபாடுகளை குறைப்பது, பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவது, தோலை பாதுகாப்பது, உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது இப்படி பல்வேறு நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது.

ஒரு கப் அதாவது 120 கிராம் ஆரோரூட் கிழங்கில் 78 கலோரிகள், 16 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 5 கிராம் புரதச்சத்து, ஃபோலேட், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய ஃபோலேட் (வைட்டமின் பி9) கர்ப்ப காலத்தில் குழந்தை வளர்ச்சிக்கும், டிஎன்ஏ உருவாவதற்கும் அவசியமான ஒன்று.

ஆரோரூட் கிழங்கு உடல் எடை குறைப்பதற்கும் உதவுகிறது. ஆரோரூட் மாவில் 32 சதவிகிதம் அசிஸ்டன்ட் மாவுச்சத்து காணப்படுகிறது. இந்த மாவுச்சத்தை உங்களுடைய உடலால் ஜீரணிக்க முடியாது. இதை தண்ணீருடன் கலக்கும் பொழுது ஒரு பிசுபிசுப்பான ஜெல் போல் உருவாகிறது. இது உங்களுடைய உடலில் கரையக்கூடிய நார்ச்சத்து போல செயல்படுகிறது. நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகள் உங்கள் செரிமான விகிதத்தை குறைத்து நீண்ட நேரம் பசி உணர்வை குறைக்கிறது.

இதனால் உங்களுடைய உடல் எடை குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆரோரூட் மாவு வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை சரி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இது உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கிறது. மிகக் கடுமையான வயிற்றுப் போக்கால் ஏற்படக்கூடிய நீர் இழப்பு மரணத்தை கூட ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை அதிகம் ஏற்படும்.

வயிற்றுப் போக்கு அதிகம் இருக்கும் பொழுது ஆரோரூட் பொடியை தினமும் 3 முறை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது வயிற்றுப்போக்கு குறைவதோடு வயிற்று வலியையும் குறைக்கும். ஆரோரூட் மாவில் இருக்கும் ஸ்டார்ச் உள்ளடக்கம் காரணமாக மிக வேகமாக மலம் வெளியேறுவதை தடுக்கிறது. இதனால் உங்களுடைய உடலில் நீர்ச்சத்து குறைபாடு தடுக்கப்படுவதோடு உடலையும் விரைவில் சீர்படுத்துகிறது.

ஆரோரூட் மாவு நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது. இந்த மாதிரி இருக்கக்கூடிய ஸ்டார்ச் உள்ளடக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்குகிறது. இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து குடலில் இருக்கக்கூடிய நன்மைபயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது. இந்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஏனென்றால் இந்த பாக்டீரியாக்கள் பல வைட்டமின்களை உற்பத்தி செய்கிறது. இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்பட வைக்க வேண்டிய முக்கியமான தாதுக்கள்.

அரோரூட்டில் பி வைட்டமின்கள் குறிப்பாக ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகியவை அதிக அளவில் உள்ளது. நியாசின் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

அரோரூட்டில் ஃபோலேட் உள்ளது. இது இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது. இரத்த சோகையை தடுக்கும். உயிரணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் அவசியமனது. கருவின் வளர்ச்சிக்கும், குழந்தைகளின் நரம்பு குழாய் குறைபாடுகளை தடுப்பதற்கும் இது முக்கியமானது.

ஆரோரூட் இரவில் நல்ல தூக்கத்தைப் கொடுப்பதற்கு உதவுகிறது. நம்முடைய உடலில் மெக்னீசியம் அளவு குறையும் பொழுது தூக்கப் பிரச்சனைகள் ஏற்படும். ஆரோரூட்டில் மெக்னீசியம் தேவையான அளவு காணப்படுகிறது. இது நம்முடைய இரவு தூக்கத்தை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

அரோரூட் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதில் காணப்படக்கூடிய பொட்டாசியம் மற்றும் சோடியம் அளவு ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதற்கும், ரத்த அழுத்தத்தை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவுகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

ஆரோரூட் நம்முடைய இதயத்தை பாதுகாக்கிறது. பொட்டாசியம் அதிகம் எடுத்துக் கொள்வது நம்முடைய இதயத்திற்கு நன்மை பயக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. அரோரூட்டில் இருக்கக்கூடிய பொட்டாசியம் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை மென்மையாக்குகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பக்கவாதம், மாரடைப்பு மற்றும் பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சி அபாயத்தை குறைக்கிறது.

பொட்டாசியம் உங்களுடைய மூளைக்கு ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்கிறது இதனால் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.