சர்க்கரைவள்ளி கிழங்கில் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபுட் கலர் கலப்படம்.. எப்படி கண்டறிவது?

சர்க்கரைவள்ளி கிழங்கில் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபுட் கலர் கலப்படம்.. எப்படி கண்டறிவது?

நீங்கள் சந்தையில் இருந்து வாங்கிய காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். குறிப்பாக குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கிழங்கு காய்கறிகளுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

எனவே நீங்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு வாங்கியபிறகு, அதில் கலப்படம் உள்ளதா, இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்தால், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிந்துரைக்கும் விரைவான சோதனை இதோ.

ரோடமைன் பி கலப்படம் என்றால் என்ன?

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரோடமைன் பி (Rhodamine B) சாயம்’ உலகில் எங்கும்’ உணவில் அனுமதிக்கப்படுவதில்லை, ஏனெனில் இது நச்சுத்தன்மை வாய்ந்தது. இது தூள் வடிவில் பச்சை நிறத்தில் தோன்றினாலும், அது தண்ணீருடன் சேரும்போது தெளிவான, ஒளிரும் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். இது அனுமதிக்கப்பட்ட ஃபுட் கலர் இல்லாததால், உணவில் இது அனுமதிக்கப்படவில்லை.

எப்படி சரிபார்ப்பது?

*தண்ணீர் அல்லது எண்ணெயில் ஊறவைத்த காட்டன் பால்ஸ் எடுக்கவும்.

*ஒரு இனிப்பு சர்க்கரைவள்ளி கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள்.

*கிழங்கின் வெளிப்புற தோலை காட்டன் பால்ஸ் மூலம் தேய்க்கவும்.

*கலப்படம் இல்லாத கிழங்கில் தேய்த்த பஞ்சு நிறம் மாறாது.

*கலப்படம் செய்யப்பட்ட கிழங்கில் தேய்க்கப்பட்ட பஞ்சு’ சிவப்பு ஊதா நிறமாக மாறும்.

அடுத்தமுறை நீங்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு வாங்கும் போது உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், மறக்காமல் இந்த சோதனையை முயற்சி செய்து பாருங்கள்!