ஈஸ்வர மூலி

ஈஸ்வர மூலி

  ஈஸ்வரமூலிக்கு இணையான மூலிகை இவ்வுலகில் வேறெதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அதிக நோய் தீர்க்கும் ஆற்றலைப் பெற்ற ஒரு அற்புத மூலிகைதான் ஈஸ்வரமூலி என்பதாகும்

  இதை மிகையாக கருதிவிடக்கூடாது சித்த மருத்துவத்தை கற்றறிந்த வைத்திய ஆசான்கள் இதை யாராலும் மறுக்க இயலாது என்பது முற்றிலும் உண்மை 

  அந்த அளவிற்கு அற்புத ஆற்றலை  பெற்றிருப்பதாலே  இம்மூலிகைக்கு சித்தர்கள் பெருமருந்து கொடி என்ற காரண பெயரை  வைத்துள்ளார்கள்

மேலும்

  உடலில் உள்ள வாத பித்த சிலேத்துமத்தை சமநிலையில் வைத்திருக்க இம் மூலிகை உதவுவதால் இந்த ஈஸ்வர மூலிகைக்கு தராசு கொடி என்றும்

  உடலில் தோன்றுகின்ற அனைத்து வியாதிகளையும் வெகு எளிதாக நிவர்த்தி செய்த செய்து உடலில் நோய்கள் ஏற்படாதவண்ணம் உடலை பாதுகாப்பதால்  இந்த ஈஸ்வர மூலிகைக்கு இதை சுட்டிக்காட்டும் விதமாக ஆதிமூல கொடி என்றும்

  விஷ ஜந்துக்கள் இம்மூலிகை இருக்கும் இடத்திற்கு வர நேரிட்டால் தலை மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்து விடும் என்பதால் தலைச்சுருளி என்றும் பல பெயர்கள் இம்மூலிகைக்கு  இருக்கிறது

ஈஸ்வர மூலிகைக்கு பெருமருந்து கொடி என்று சித்தர்கள் பெயர் வைத்த காரணமும் அதற்கான விளக்கமும்

  பொதுவாக

  ஒரு மூலிகையை இடித்து பொடி செய்து அந்த மூலிகை பொடியை மூன்று மாதகாலம் மட்டுமே பயன்படுத்தலாம் காரணம் யாதெனில் சூரணத்தின் ஆயுள் காலம் மூன்று மாதம் மட்டுமே இது சித்தர்கள் சொல்லிய கணக்காகும்

  ஆனால் மூன்று மாத காலத்திற்கு மேலும் சூரணமாக செய்த மூலிகை பொடியை பயன்படுத்தலாம் அதற்கு இந்த ஈஸ்வர மூலிகை பயன்படுகிறது 

எவ்வாறெனில்

  ஈஸ்வர மூலிகையின் வேரை இடித்து பொடி செய்து வைத்துக்கொண்டு நோயைத் தீர்க்கும் மூலிகை மருந்தில் இந்த வேரின் பொடியை  கலந்தால் போதும் அந்த மருந்திற்கு அதிக வீரிய சக்தியும் அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்கின்ற ஆற்றலும் கிடைத்து விடும்

   சித்த வைத்திய முறையில் முப்பு எனும் ஒரு குரு மருந்தே அனைத்திற்கும் முதல் மருந்தாக சித்தர்களால் சொல்லப்பட்டு இருக்கிறது இதை எல்லோராலும் செய்து விட முடியாது 

ஆனால் 

சித்த மருத்துவம் செய்திட குரு மருந்து கட்டாயமாக வேண்டும் அந்த குரு மருந்தாக இந்த ஈஸ்வர மூலிகை பயன்படுகிறது 

அதாவது

   சித்த வைத்திய முறைப்படி எந்த மருந்தை செய்தாலும் அந்த மூலிகை மருந்தில் பத்தில் ஒரு பங்கு ஈஸ்வர மூலிகையின் வேர் பொடியை குரு மருந்தாக கலந்து பயன்படுத்தினால் அந்த  மருந்திற்கு அதிக சக்தி உண்டாகிவிடும்

   அதிகமான நோய் தீர்க்கும் ஆற்றலை பெறும் மூன்று மாதகாலம் சாப்பிட வேண்டிய மருத்துவத்தை ஒரு வாரகாலம் சாப்பிட்டாலே போதும் என்ற அளவிற்கு அந்த மருந்தில் ஒரு அற்புத சக்தி கிடைத்துவிடும் 

  தீராத நோய்க்கு மருந்து உட்கொள்ளும் பொழுது அந்த மருந்தில் ஈஸ்வர மூலியின் வேர் பொடியை துணை மருந்தாக பயன்படுத்தினால் அந்த தீராத நோயும் தீரும் இது உண்மை

 பொதுவாக

ஈஸ்வர மூலிகையின் இலையை இடித்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் தீராத இருமல் சளி ஆறாத புண்கள் மூட்டு வலி உயர் ரத்த அழுத்தம் வலிப்பு நோய் ரத்த சோகை விஷக்கடிகள் மேகப்படை மற்றும் தோல் நோய்கள் அனைத்தும் தீரும் 

மேலும் தீராத சர்க்கரை நோயால் வந்த புண்கள் ஆறி வருவதற்கும் சர்க்கரைநோய் குறைவதற்கும் புற்று நோய் உள்ளவர்களுக்கும் இது நல்ல மருந்தாக பயன்படும்

  ஈஸ்வர மூலிகையின் வேரை பொடி செய்து இதில் பத்தில் ஒரு பங்கு மிளகின் பொடியை இதனோடு  சேர்த்து இதில் இரண்டு கிராம் எடுத்து காலை மாலை இரண்டு வேளையும் நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோய் முழுமையாக குணமாகும் மேலும்  சொரியாஸிஸ் எனும் கொடிய தோல் நோய் குணமாகும்

 ஈஸ்வர மூலிகையின் வேரை பொடி செய்து இந்த தனி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர கால் ஆணி குணமாகும்

ஈஸ்வர மூலிகையின் இலையை பறித்து இதனோடு பசுமஞ்சள் சேர்த்து இரண்டையும் மைபோல் அரைத்து உடல் முழுவதும் பூசி குளித்து வர வியர்வை நாற்றம் போகும் தோல் நோய்கள் வராமல்  உடலை பாதுகாக்கும்

  உயர் ரத்த அழுத்தம் குணமாக

வைரம் பாய்ந்த சந்தன மரக்கட்டையை பொடியாக செய்து இந்தப் பொடியில் பத்தில் ஒரு பங்கு ஈஸ்வர மூலிகையின் வேர் பொடியை கலந்து  இதில்  இரண்டு கிராம் எடுத்து தேனில் குழைத்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது  நாட்கள்  சாப்பிட்டு வர தீராத உயர் ரத்த அழுத்தம் எனும் ரத்த கொதிப்பு நோய் முழுமையாக குணமாகும் 

இந்த மூலிகைக்கு ஈஸ்வர மூலிகை என பெயர் வரக் காரணமும் அதற்கான விளக்கமும்

  ஈஸ்வர மூலிகையை இடித்து பொடியாக செய்து கொண்டு இதில் மூன்று கிராம் எடுத்து தேனில் குழைத்து உப்பு புளி காரம் நீக்கி பத்தியம்  காத்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு கொண்டு தியானம் மற்றும் யோக சாதனைகளை பயின்று வர சித்தர் தரிசனம் கிடைக்கும் என்றும் யோகசித்தி ஏற்பட்டு ஞான நிலை உண்டாகும் என்றும் சித்தர்கள் சொல்லிய யோக சாஸ்திரத்தில் இதற்கான குறிப்புகள் இருக்கிறது 

 அதனாலேயே இந்த மூலிகைக்கு ஈஸ்வர மூலிகை என்றும் அனைத்து மருந்திலும் முதல் மருந்தாக இந்த மூலிகை இருப்பதாலே இந்த பச்சிலைக்கு பெருமருந்து கொடி என்றும் சித்தர்கள் பெயர் சூட்டி உள்ளார்கள்

நோய் எதிர்ப்பு சக்தி பெற 
தீராத நோயிலிருந்து விடுபட

  ஈஸ்வர மூலிகையின் இலை மற்றும் வேரினை சமமாக சேகரித்து இடித்து பொடி செய்து கொண்டு இந்த பொடியில் பத்தில் ஒரு பங்கு மிளகுப் பொடியும் மிளகில் பாதி சீரகபொடியும் இதனோடு சேர்த்து இதை ஒரு ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொண்டு காலை மாலை இருவேளையும் நாற்பது நாட்கள் பத்தியமாக சாப்பிட்டு வர உடலில் நோய்கள் அனைத்தும் தீரும் உடலுக்கு நோய் வராதபடி நம்மை பாதுகாக்கும்

  எந்த ஒரு நோய்க்கு மருந்து சாப்பிட்டாலும் அந்த மருந்தில் ஈஸ்வர மூலிகையின் வேர் பொடியை கலந்து சாப்பிட்டால் கட்டாயமாக தீராத நோய்கள் அனைத்தும்  தீர்ந்துவிடும் இது சித்தர்களின் வாக்கு.