முந்திரி பழம் நன்மைகள் :

முந்திரி பழம் நன்மைகள் :

முந்திரி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. முந்திரியை சாப்பிடாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். முந்திரி என்றாலே அனைவருக்கும் தெரியும். ஆனால் முந்திரி பழம் என்று சொன்னால் ஒரு சிலருக்குத்தான் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பலருக்கும் அந்த பழம் எந்த உருவத்தில் அமைந்துள்ளது என்பதே தெரிந்திருப்பது குறைவுதான். பல அதிசய குணம் நிறைந்துள்ள முந்திரி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்..

அடங்கியுள்ள சத்துக்கள் :

முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா கரோட்டீன், டானின் என்று சொல்லக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ள முந்திரி பழத்தை நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமது உடலிற்கு கிடைக்கிறது என்று தெரிஞ்சிக்கலாம் வாங்க..

பெரும்பாலோனோருக்கு உடலில் வைட்டமின் குறைபாட்டினால் பல நோய்கள் தாக்கம் செய்கிறது. உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் முக்கியமான ஒன்று. நாம் அனைவரும் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆரஞ்சு பழத்தில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்துள்ளது என்று, ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு வைட்டமின் சி சத்து ஒரு முந்திரி பழத்தில் அடங்கியுள்ளது. எனவே வைட்டமின் சி சத்து உடலில் போதுமான அளவிற்கு கிடைப்பதற்கு முந்திரி பழம் சாப்பிட்டு பாருங்கள்.. தானாகவே வைட்டமின் சி சத்தானது அதிகரிக்கும்.

எலும்பு பலமாக இருக்க :
 
எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியும். எலும்புகள் பலமாக இருக்க கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் மிகவும் அவசியம். இந்த சத்துக்கள் முழுவதும் முந்திரி பழத்தில் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல் குணமாக :

காரம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால் தான் வயிறு வலி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது என்று பலரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அந்த காரணம் மட்டுமல்லாமல் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. முந்திரி பழத்தில் சார்பிட்டால் என்ற வேதிப்பொருள் உடலில் சென்றடைகிறது. உடலில் சென்று பெருங்குடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை வழங்கி கழிவுகளை சுலபமாக அகற்ற உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் குணமடைகிறது.

தோல் பிரச்சினை சரியாக :
 
தோல் சார்ந்த பிரச்சனையானது பாகுபாடின்றி ஆண்கள் மற்றும் பெண்கள் சந்திக்கக்கூடிய ஒன்று. ஆண்களை விட பெண்களுக்கே இந்த பிரச்சனை அதிகளவில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கடைகளில் விற்கக்கூடிய செயற்கை க்ரீம்களை அதிகமாக உபயோகப்படுத்துவதால் சில பின் விளைவுகள் ஏற்படுகிறது. தோல் பிரச்சனையை குணப்படுத்த முந்திரி பழத்தில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் தோலில் உண்டாகும் அரிப்பு, சுருக்கம், மற்றும் வெடிப்பு போன்றவற்றை நீக்குகிறது. குறிப்பாக அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் முந்திரி பழம் பயன்படுகிறது.

முந்திரி பழம் சாப்பிடும் முறை :

இந்த பழத்தை மரத்திலிருந்து பறித்து 24 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் இந்த பழம் சீக்கிரத்தில் அழுகிவிடும் தன்மை கொண்டது. இந்த முந்திரி பழத்தின் ஜூஸானது பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

கவனிக்க வேண்டியவைb:

முந்திரி பழத்தை சாப்பிடும் போது தொண்டை பகுதியில் கரகரப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.. தொண்டையில் கரகரப்பு வராமல் இருப்பதற்கு அதனை வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிட வேண்டும்.