மண்பானையில் வைத்து தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா?

மண்பானையில் வைத்து தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன தெரியுமா?

பழங்காலத்தில் களிமண் பானையில் தான் நீரை ஊற்றி வைத்து அனைவரும் பயன்படுத்தினர்.

மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருட்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சி விடும்.

பிளாஸ்டிக், ஸ்டீல் பாத்திரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதைவிட களிமண் பானையை உபயோகித்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் உண்டாகும்.  

தற்போது மண்பானையில் தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

களிமண் பானையில் உள்ள தண்ணீரைக் குளிர்விக்க மிகவும் உதவுகிறது. இது படிப்படியாகத் தண்ணீரை குளிர்விக்கும் ஆற்றல் பெற்றது. 

 களிமண் பானை தண்ணீர் தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும். இதனால் சளி இருமல் உள்ளவர்கள் கூட இதனை பயப்படாமல் அருந்தலாம்.

 மண் பானையில் சேமிக்கப்படும் நீரிலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம்முடைய உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. அது உடலையும் குளிரூட்டச் செய்யும்.

 களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமன் செய்ய உதவுகிறது. இது உங்களுடைய உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த உதவுகிறது. 

 மண் பானை தண்ணீரில் இயற்கையாக இருக்கும் ஆல்கலைன் நம்முடைய உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதனால்தான் மண் பானை குடிநீரைக் குடிக்கும்போது தாகம் தீர்ந்ததாக உணர்கிறோம். 

 மண் பானை நீரில் கனிமச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கோடை காலத்தில் இருக்கும் அதிகப்படியான வெம்மையின் காரணத்தால் சரும நோய்கள் முதல் அம்மை முதலிய பல உடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்கின்றது.