நரைமுடி கருக்க வேண்டுமா?

நரைமுடி கருக்க வேண்டுமா?

அப்போல்லாம் நம்ம
தாத்தா பாட்டிகளுக்கு கருங்கருன்னு முடி பார்க்கவே இளமையாக இருப்பார்கள், இப்போல்லாம் இளம் வயதிலேயே நரை முடி வந்து விடுகிறது
சின்ன வயசுலயே முதிர்ச்சியடைந்தவர் போல காட்சியளிக்கிறார்கள்.

சிலரைப் பார்த்தால், அவருக்கு வயது 23 தான் இருக்கும். ஆனால் அவரது முடியைப் பார்த்தால், அது அவருக்கு வயதாகியிருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைத்துவிடும்.
இப்படி இளம் வயதில் நரைமுடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முதன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும்.
ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.
அதற்கு காரணம் என்ன தெரியுமா....?

நீங்கள் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளவில்லை என்பதன் அறிகுறி. விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இல்லாத உணவுகளை உண்ணுதல், மரபணு என நரை முடி உண்டாகப் பல காரணங்கள் உண்டு.
ஸ்ட்ரெயிட்டனிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், மட்டமான, தரமில்லாத ஷாம்பு, அதிக அளவில் பொடுகு ஆகியவையும்
நரைத்த முடி வர காரணமாகும்.

பி காம்ளெக்ஸ் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து அடங்கிய உணவு, எண்ணெய் தேய்த்து
பராமரிப்பு செய்தல் ஆகியவை
நரை முடி வருவதைத் தடுக்கும்.
இரும்புச் சத்துள்ள பேரிச்சை போன்ற பழங்கள், மீன், கீரைகள் முடி நன்கு வளர உதவும். அதைப்போலவே பால், முட்டை, பயிறு உள்ளிட்ட புரதம் மிகுந்த உணவும் மிக மிக அவசியம்.

விட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மை தரும். எண்ணெய் தேய்ப்பதற்கும் முடி உதிர்வது நிற்கும் என்பதற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. ஆனால், முடியைப் பராமரிக்க எண்ணெய் தேய்ப்பது அவசியம். அது முடி உதிர்வைத் தடுக்கும்.

கடையில்  விற்பனை செய்யப்படும் ஏதோ ஒரு கிரீம், ஆயில் ஆகியவற்றை தடவுவதால் முடி உதிர்வது, நரைப்பது தடுக்கப்படும் என்பது ஓரளவே உண்மை. பல வண்ணங்களில், ஊட்டம் மிகுந்த உணவுகளே முடிக்கு மிகவும் அவசியம்.

இந்த வகையில் சித்தர்கள் நரையை விரட்ட ஒரு எளிய வழியை நமக்கு சொல்லியுள்ளார்கள் அதைபற்றி பார்ப்போம்

பொடுதலை,
கருங்காகட்டான்,
நீலி, பிரமி,
கொடுதலை,
வல்லாரை ஆகியவற்றை கொண்டு வந்து நிழலில் உலர்த்தி
பவுடராக்கி வைத்துக்கொண்டு
ஒரு மண்டலம் (48நாட்கள் ) காலை மாலை
வெருகடி அளவு தேனில் குழைத்து சாப்பிட நரை மாறி முடி கருப்பாக வளரும்.

(இது 60வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் )