கிராம்பு கலப்படத்தை வீட்டிலேயே சரிபார்ப்பது எப்படி?
என்னது! நாம் பயன்படுத்துவது ஒரிஜினல் கிராம்பு இல்லையா? கிராம்பு கலப்படத்தை வீட்டிலேயே சரிபார்ப்பது எப்படி?
இந்திய மசாலாப் பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை, அதில் கிராம்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கருப்பு/பழுப்பு நிற, நறுமணமுள்ள கிராம்பு, ஆயுர்வேதத்திலும் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. வாய் துர்நாற்றம், பல் சிதைவு, செரிமானம் மற்றும் பலவற்றிற்கு கிராம்பு’ சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத வீட்டு வைத்தியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
ஆனால், நீங்கள் வாங்கும் சாதரண கிராம்பில் கூட’ கலப்படம் செய்யப்படுவது உங்களுக்கு தெரியுமா?
அறிக்கைகளின்படி, கிராம்பு எண்ணெய்’ அதன் காய்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது, பிறகு, ஊட்டச்சத்து குறைந்த காய்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.
இப்போது கேள்வி என்னவென்றால், இது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கிராம்பு என்பதை நீங்கள் எப்படி கண்டறிவது?
சாமானியர்களுக்கு இதை எளிமையாக்க, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ட்விட்டரில்’ சமீபத்தில், வீட்டில் ஏற்கெனவே பயன்படுத்திய கிராம்பு, பயன்படுத்தாத கிராம்புகளை எப்படி கண்டறிவது என்பது குறித்த சோதனை வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
பயன்படுத்திய கிராம்பு என்றால் என்ன?
கிராம்புகளில் இருந்து ஆவியாகும் எண்ணெய்’ வடித்தல் மூலம் எடுக்கப்படுகிறது. எஞ்சிய சக்கை, சில நல்ல கிராம்புகளுடன் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, பிரித்தெடுத்தல் செயல்முறை’ கிராம்புகளின் அனைத்து நன்மைகளையும் நீக்குகிறது, எனவே அத்தகைய கிராம்புகளைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஆனால் சிலர் வியாபார நோக்கத்திற்காக, அத்தகைய கிராம்புகளில்’ செயற்கை வாசனை திரவியங்களைச் சேர்த்து விற்பனை செய்கின்றனர். அவற்றை நீங்கள் சமைத்தவுடன், வாசனை ஆவியாகிவிடும், இறுதியில் நீங்கள் உணவில் பார்ப்பது சுவையற்ற கிராம்புகள் தான்.
கிராம்பு கலப்படத்தை வீட்டிலேயே சரிபார்ப்பது எப்படி?
1. ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. மாதிரி கிராம்புகளை அதில் சேர்க்கவும்.
3. கலப்படமில்லாத கிராம்பு கண்ணாடி டம்ளரின் அடிப்பகுதியில் குடியேறும்.
4. கலப்படம் செய்யப்பட்ட கிராம்பு நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.
அடுத்தமுறை நீங்கள் கிராம்பு வாங்கும்போது உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால்’ இந்த குறிப்புகளை பயன்படுத்தி கிராம்புகளின் உண்மைத் தன்மையை கண்டறியவும்.