பல நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி மிகச்சிறந்த மருந்து எது தெரியுமா.....?
பல நோய்களை கட்டுப்படுத்தும் சக்தி மிகச்சிறந்த மருந்து எது தெரியுமா.....?
அருகம்புல் சாறு எடுத்து குடித்து வந்தால் உடலிலுள்ள பல வியாதிகள் குணமாகும். அருகம்புல்லை சுத்தமான தண்ணீரில் போட்டு நன்கு கழுவிய பிறகே அதனை பயன்படுத்த வேண்டும்.
அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ உள்ளது. இதனை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அருகம்புல் சாறு இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்றவற்றை சரி செய்கிறது.
அருகம்புல் சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். மேலும் வாயுத்தொல்லை நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் பிரச்சினைகளுக்கு அருகம்புல் சாறு நல்ல மருந்தாக பயன்படும். அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு கட்டுப்படும்.
தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும்.
அருகம்புல் ஜூஸ் குடிப்பவர்களுக்கு சிறுநீர் நன்கு பிரிந்து சிறுநீரகங்களில் கற்கள் சேராமல் தடுக்கும். அருகம்புல்லில் கால்சியம், மெக்னீசியம் உள்ளதால் தினந்தோறும் அதனை குடித்து வந்தால் எலும்புகள் உறுதியாக இருக்கும்.
நுண்கிருமிகளால் தோலில் படை, புண் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் அருகம்புல் சாறு அருந்தினால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் விரைவில் குணமாகும்.
புளிப்பில்லாத கெட்டி தயிரில் அருகம்புல் சாறு 50 மில்லி கலந்து காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.