ரோஜா மலரில் இருந்து செய்யப்படும் மருத்துவ குணமிக்க குல்கந்து !!

ரோஜா மலரில் இருந்து செய்யப்படும் மருத்துவ குணமிக்க குல்கந்து !!

ரோஜா மலரின் இதழ்களிலிருந்து
செய்யப்படும் ஒரு மருத்துவ குணமிக்க
உணவுப்பொருள் தான் “ரோஜா குல்கந்து". 

ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து குடித்து, அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிடலாம்.

குளிர்ந்த பாலில், ஒரு டீஸ்பூன் குல்கந்துவை கலந்து குடிக்கலாம். குல்கந்துவை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெத்தலையில் வைத்து மடித்து சாப்பிடலாம்.

ரோஜா குல்கந்தை சாப்பிடும் ஆண்களுக்கு உடல் குளிர்ச்சி அடையும், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

சிலருக்கு உடலில் அதிகம் வியர்வை சுரக்கும், இதனால் அவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகம் இருக்கும். அவர்களது உடல் துர்நாற்றத்தை போக்க குல்கந்து மிகவும் உதவியாக இருக்கும்.

குல்கந்து உடலை குளிர்விக்க உதவுகிறது. எனவே வெப்பநிலை அதிகம் உள்ள காலங்களில் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு இரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிடலாம். இதனால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.