சிறுநீரில் விந்து வெளியேறுகின்றதா?

சிறுநீரில் விந்து வெளியேறுகின்றதா?

சிறுநீர் வழியாக விந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது, "புரோஸ்டேட்" சுரப்பியின் வீக்கம் அல்லது அழற்சி.
இதனை மருத்துவ ரீதியாக  'புரோஸ்டேடிடிஸ்' என கூறுவார்கள். விந்து உற்பத்தி மற்றும் வெளியேறுவதற்கு "புரோஸ்டேட்"சுரப்பி உதவிடும். சில மருத்துவ நிலைபாடுகளினால் இந்த சுரப்பியில் நீண்ட கால மற்றும் தீவிர வீக்கம் ஏற்படலாம்.

சிறுநீர் கழிக்கும் போது, அதன் மீது சிறுநீர்ப்பை இடிக்க கூடும். இதனால் சிறுநீர் கழிக்கும் அதே நேரத்தில் சிறிதளவு விந்தணுவும் வெளியேறும்.
சிறுநீரில் போதிய அளவில் விந்தணு இருந்தால், சிறுநீர் வெளியேறும் போது அவை மேகமூட்டம் போல் காட்சி தரும். ஏதோ ஒரு பிரச்சினை என்பதற்கான முதல் அறிகுறியே இது.

பொதுவாக ஆண்கள் போதிய
அளவில் விந்துதள்ளலில் ஈடுபடவில்லை என்றாலும் கூட "புரோஸ்டேட்" சுரப்பி வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இது வளர்ச்சியடைய சில காலம் ஆனாலும் கூட, காம உணர்வு ஏற்படும் போது, உடலுறவில் ஈடுபடாமல் போனாலோ அல்லது சுயஇன்பம் காணாமல் போனாலோ, உங்கள் "புரோஸ்டேட்"சுரப்பியில் அளவுக்கு அதிகமான விந்தணு சேர்ந்துவிடும்.

இது ஒன்றும் ஆபத்தான விஷயம் இல்லை தான், இப்படி தேங்குவதால் "புரோஸ்டேட்"சுரப்பி வெடித்து விடும் என்றெல்லாம் கிடையாது. இதற்கு சரியான தீர்வு, விந்துதள்ளல் தான்.
அப்படி நடக்கும் போது வீக்கமும் மெதுவாக குறையத் தொடங்கும்.

சிறுநீரில் விந்தணு வெளியேறுவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக கருதப்படுவது பிற்போக்கு விந்துதள்ளல். வடிகுழாய் வழியாக உடலை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக சிறுநீர்ப்பைக்குள் விந்தணு
பின்னோக்கி செல்லும் நிலையே
இது. விந்துதள்ளலின் போது சிறுநீரையும் விந்தணுவையும் பிரிக்க நடைபெறும் சிறுநீர்ப்பை சுருக்கம் நடைபெறாததால் ஏற்படுவதே இந்த நிலை.

இந்த நிலையால் அவதிப்படும்
ஆண்கள் உடலுறவை கொண்ட உடனேயே சிறுநீர் கழிக்கும் போது அதனை மேகமூட்டம் போல் காணலாம்.
ஆனால் மற்ற நேரங்களில் அப்படி பார்க்க முடிவதில்லை

நாட்டுமருத்துவமே இதற்கு சிறந்த தீர்வு.

தேவையான மருந்துகளும் செய்முறையும்:-

1.நன்கு கொதித்து ஆறிய தண்ணீர்
2600 மில்லி லிட்டர்.
2.சர்க்கரை - 500கிராம்
3.வெல்லம் - 250கிராம் 
இவைகளைக் கலந்து அதில் உளர் திராட்சை 100கிராம் இடித்து சேர்த்து அதில்,

1.சந்தனம் 
2.குருவேர்
3.கோரைக்கிழங்கு
4.குமிழ்
5.நீல ஆம்பல் கிழங்கு
6.ஞாழல் பூ
7.பதிமுகம்
8.பாச்சோத்திப்பட்டை
9.மஞ்சட்டி 
10.செஞ்சந்தனம்
11.பாடக்கிழங்கு
12.நிலவேம்பு
13.ஆலம்பட்டை
14.அரசம்பட்டை 
15. பூலாங்கிழங்கு (கிச்சலிக்கிழங்கு)
16.பர்பாடகம்
17.அதிமதுரம்
18.சித்தரத்தை
19.பேய்ப்புடல்
20.மந்தாரைப்பட்டை
21.மாம்பட்டை
22.இலவம்பிசின்
(இதில் ஒவ்வொன்றும் 5கிராம் ) 

இவைகளைப்  பொடித்துப் போட்டுக் காட்டாத்திப்பூ 80
கிராம் சேர்த்து முறைப்படி ஒரு மாதம் வரை ஊறல் போட்டு வைத்திருந்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

குறிப்பு:-
நாட்டு சர்க்கரையும், திராட்சையும் வகைக்கு 7.5 சதவிகிதமும்,
வெல்லம் 8.7சதவிகிதமும் அதிகமாகச் சேர்ப்பது சம்பிரதாயம்.

அளவும் அனுபானமும்:-  
10 முதல் 30 மில்லி லிட்டர் வரை
சம அளவு தண்ணீருடன் இருவேளை சாப்பிட்டு வர மேற்கண்ட பிரச்சினை தீரும், மேலும் இந்த மருந்தால்

நீரெரிச்சல், நீர்ச்சுருக்கு எனும் மூத்திரச்சுருக்கு, மூத்திர நாள அழற்சி, சிறுநீருடன் விந்து கழிதல்,  சீழ்மேகம், வெள்ளை, பலவீனம், அதிக உடற்காங்கை, இதய நோய்கள்.
மேலும்  இந்த மருந்து உடல் உஷ்ணத்தை குறைக்க பயன்படுகிறது.
ஆண்களின் தூக்கத்தில் விந்து அதிக வெளியேற்றதையும், சிறுநீருடன் விந்து வெளியேறுவதையும் குறைக்க, குணபடுத்த உதவும் பெண்களின் வெள்ளை போக்கை
சரி செய்யவும் பயன்படுகிறது.