தினமும் 2 ஸ்பூன் எள் சாப்பிடுங்க.. இந்த நோய் உங்களை நெருங்கவே நெருங்காதாம்!

தினமும் 2 ஸ்பூன் எள் சாப்பிடுங்க.. இந்த நோய் உங்களை நெருங்கவே நெருங்காதாம்!

நம்முடைய பாட்டி வைத்தியம் முதல் ஆயுர்வேத மருத்துவம் வரை எள்ளுக்கு என்றே மிக முக்கிய இடமுண்டு.

இதில் முழுக்க முழுக்க ஊட்டச்சத்துக்களால் நிரம்பியது. புரதச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் ஈ, நல்ல கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன.  

அதுமட்டுமின்றி இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. குறிப்பாக நீரிழிவு பிரச்சினைகள், வயிற்றுக் கோளாறுகள், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஆகியவற்றை நிர்வகிக்க எள் மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.

அதிலும் தினமும் 2 ஸ்பூன் அளவுக்கு எள் சாப்பிடுவது உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

2-3 டேபிள் ஸ்பூன் எள் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள லிப்பிட்ஸ் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் உடலில் உள்ள LDL கெட்ட கொலஸ்ட்டிராலின் அளவை 8-16 சதவீதம் அளவுக்கு குறைப்பதோடு, உடலின் ஒட்டுமொத்த கொலஸ்ட்டிராலின் அளவையும் 8 சதவீதம் அளவு குறைக்கச் செய்கிறது.

எள்ளில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களை ஊக்குவிக்கிறது.

தினமும் 3.6 மைக்ரோகிராம் அளவுக்கு எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால், வெறும் இரண்டே மாதத்தில் 16 சதவீதம் கெட்ட கொழுப்பை எரிக்கிறது. இரண்டே மாதத்தில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை 8 சதவீதம் அளவுக்கு குறைக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதை தடுகின்றது.

​எப்படியெல்லாம் சாப்பிடலாம்?  

பிரட், ரொட்டி மற்றும் சப்பாத்தி செய்யும்போது எள்ளை மாவில் சேர்த்துப் பிசைந்து செய்யலாம். அது உணவின் சுவையை அதிகரிப்பதோடு எள்ளின் சத்துக்களையும் முழுமையாகக் கிடைக்கச் செய்யும்.  

சாலட்டுகள், சூப்கள், நட்ஸ்கள், விதைகள் ஆகியவற்றோடு சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு

 இதனை அளவுக்கு அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளத் தேவையில்லை. தினசரி 2 ஸ்பூன் வீதம் எடுத்துக் கொண்டால் போதுமானது. ஏனெனில் எள்ளுக்கு உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது.