முகப்பரு தழும்பை சரிசெய்ய...
முகப்பரு தழும்பை சரிசெய்ய...
முகப் பரு வந்து இல்லாமல் போனாலும் அதன் அடையாளம் கறுப்பாக இருக்கிறதா.? இதில் சிறிதளவு பூசுங்கள்…அடையாளம் நிரந்தரமாக மறைந்துவிடும்..!!
நாம் பார்க்கப் போவது முகத்தில் வரும் பருக்களை எப்படி நீக்குவது என்பது பற்றித் தான். இந்த முகப் பருக்கள் 13 வயதை எட்டும்போதே ஆரம்பித்து விடுகிறது. 40 வயதை கடந்த பின்பும் கூட வருகிறது.
சிலருக்கு பருக்கள் வந்து மறைந்தாலும் பலருக்கு அது வந்து சென்ற அடையாளங்கள் கறுப்பாகி அப்படியே இருக்கும் இதற்கான தீர்வை தான் இன்று பார்க்கப் போகின்றோம். தேவையான பொருட்கள்: தேன், பட்டை (Cinnamon powder) தூள் எலுமிச்சை. இதனை கொண்டு எப்படி மருந்து செய்வது என பார்க்கலாம்.
பட்டைத் தூள் ஒரு கரண்டி எடுத்து அதனுடன் தேன் ஒரு கரண்டி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இதனை பஞ்சு ஒன்றில் தொட்டு மெதுவாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள்.பின் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விடுங்கள்.!
இப்படி மூன்று நாட்கள் செய்யும் போதே உங்கள் பரு அடையாளங்கள் மறையத் தொடங்கி விடும். அதே போல் இன்னுமொரு இலகுவான டிப்ஸ். ஒரு கரண்டி மஞ்சள், அரை கரண்டி ஒரிஜினல் ரோஸ் வாட்டர் , அத்துடன் தேன் அரை கரண்டி மற்றும் ஒரிஜினல் கற்றாழை ஜெல் சிறிதளவு.
இவற்றை நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 30 நிமிடங்களின் பின் கழுவுங்கள். இதை விட சிறந்த டிப்ஸ் உங்களுக்கு எந்த கிரீமிலும் கிடைக்காது. முயற்சி செய்து பாருங்கள்..பிடித்தால் பகிருங்கள்.