கழிவுகளின் தேக்கமே நோய்

நமது உடல்சரியாக இயங்க வேண்டுமெனில்…

நமது உடலில் உள்ள இராஜ
உறுப்புகள் சரியாக இயங்க
வேண்டும்…

         நமது உடலில் நோய் உருவாக காரணம் கழிவுகளே ஆகும். 

கழிவுகளின் தேக்கமே நோய்

            உடலில் கழிவுகள் நாள்பட தேங்கும்போது நோயாக மாறுகிறது. 

இக்கழிவுகள் உடலில் தேங்கி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையானப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
 
        கழிவுகள் நமது உடலில் 
“உச்சி முதல் பாதம்” வரை தேங்கி நிற்கிறது. 

       உடற்கழிவுகளை நீக்கும்
பொருட்டு நீங்கள் செய்ய வேண்டியது இது தான்……

                      திரிபலா முத்தோஷம் நீக்கும். வயிறு தொந்தரவுகளை சரி செய்து உடம்பில் உள்ள அனைத்து கழிவுகளையும் நீக்கி ராஜ உறுப்புகளைவும் மற்றும் அனைத்து உள் அவையங்களை பலப்படுத்தும். வந்த நோய்களை குணப்படுத்தும். இனி நோய் வராமல் பாதுகாக்கும்…

 பொதுவான ஆரோக்கியத்திற்காக மருந்து சாப்பிடுவதாக இருந்தால் , திரிபலா சாப்பிடலாம். வாழ்நாள் முழுவதும். ஆங்கில மருந்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

இறைவன் தந்த அற்புதமான
அதிசய மாமருந்து திரிபாலா…

திரிபலா சூரணம்:

திரிபலா ஒரு பாரம்பரிய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

1).கடுக்காய் 100 கி

2).நெல்லிக்காய் 100 கி

3).தான்றிக்காய் 100 கி

எடுத்துக் கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர்கள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

திரிபலா தரும் நன்மைகள்...

இரைப்பை பலவீனத்தை சரிசெய்து, உணவிலிருந்து சுத்தமான அன்னரசத்தை பிரிக்க உதவுகிறது. (EXTRACTS)

இரத்தத்தை தேவையான அளவு உற்பத்தி செய்யவும், இரத்தக் கழிவுகளை வெளியேற்றவும், இரத்தத்தில் கலந்த பித்தத்தையும் வெளியேற்றிட உதவுகிறது.

இதன் துவர்ப்புத் தன்மையால் அதிக உஷ்ணம் தணிந்து உள்ரணம் ஆற்றப்படுகிறது.

நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், கழிவு மண்டலம் அனைத்தையுமே சீர்ப்படுத்துகிறது.
     
முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

 உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப் புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

வயிற்றுப் புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இரத்தசோகையை சரிசெய்கிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

 கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

இரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். இரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.

 மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.

உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.

திரிபலா சூரணம் (பொடி) இதில் கை விரலை பயன்படுத்தி தேய்த்து வர ஈறுகளில் இரத்தம் கசிதல், பல்தேய்மானம், பல் கூச்சம், வீக்கம் ஆகியன தீரும். பிரஷ் (brush) பயன்படுத்தக் கூடாது.

எப்போது எப்படிச் சாப்பிட வேண்டும்:

மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். 

💦 குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.

⛄ பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

☀ கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்

உணவுக்கு பின்………

👉 காலை 5 கி

👉 இரவு 5 கி 

சூடான வெண்ணீரில் கலந்து சாப்பிடவும்.

 
உள் மருந்தாக………

வறட்டு இருமலினால் அவதியுறுவோர்……

ஒரு கிராம் அளவு திரிபலா சூரணத்தை வெந்நீருடன் கலந்து குடிக்க தற்காலிக குணம் கிடைக்கும். 

நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டும், ரசாயன கொசு விரட்டிகளை தவிர்த்தும், சளிக்கு ஆங்கில மருந்துக்களை தவிர்த்தும் வறட்டு இருமலில் இருந்து நிரந்தர தீர்வை பெறலாம்.

 வயிற்றுவலி, மற்றும் நெஞ்செரிச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள்…

ஒரு கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தற்காலிக நலம் பெறலாம். 

பசிக்கும்போது மட்டும் பிடித்தமான உணவுகளை நிதானமாக மென்றும், பால் கலந்த டீ காப்பி போன்றவற்றை தவிர்த்தும், உணவில் உள்ள சுவையினை நாவால் ருசித்தபின் ருசியற்ற உணவை முழுங்குவது மூலமாக நிரந்தர குணம் பெறலாம். 

மலச்சிக்கலுக்கு……

இரண்டு கிராம் சூரணத்தை, வெந்நீருடன் கலந்து இரவு தூங்கும் முன் பருகி வர தற்காலிக நிவாரணம் பெறலாம்.

தினமும் உணவில் நார்சத்து Fiber அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொண்டும் நிரந்தர தீர்வை பெறலாம்.

மலம் கழிக்கையில் இரத்தம் வருதல், பெண்களுக்கு ஏற்படும் அதி இரத்தப்போக்கு, பௌத்திர நோயில் காணும் சலம் இவற்றிற்கு……

1-2 கிராம் அளவு சூரணத்தை தேனுடன் கலந்து காலை - மாலை உண்ண தற்காலிகமாக நோய் நீங்கி நலம் பெறலாம்.

இரவில் இயற்கை காற்றோட்டம் வரும் வகையில் ஜன்னலை திறந்து வைத்து உறங்கியும், பால் கலந்த டீ காப்பி போன்றவற்றை தவிர்த்தும், ரசாயன கொசு விரட்டிகளை தவிர்த்தும் நிரந்தர தீர்வை பெறலாம்.

உடற் பருமனை குறைக்க விரும்புபவர்கள்……

காலை மாலை உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சூரணத்தை சுடுநீருடன் கலந்து பருக தற்காலிக நலம் பெறலாம்.

பசிக்கும்போது மட்டும் உணவை நன்கு மென்று சாப்பிட்டு வருவதன் மூலமும், உணவு திகட்டியவுடன் உண்பதை நிறுத்துவதன் மூலமும், பிடித்த வெளி விளையாட்டுக்களை தினசரி விளையாடுவதன் மூலமும் நிரந்தர பலன் பெறலாம்.

 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு……

நோய் வராது தடுக்கும் காயகற்ப மருந்தாக திரிபலா சூரணத்தை மாலையில் உணவிற்கு முன் ஒரு கிராம் அளவு சுடுநீருடன் கலந்து பருகிவர தற்காலிக பலன் கிடைக்கும்.

வெளி மருந்தாக…

பற்பொடியாக பயன்படுத்த, பற்கூச்சம், பல்வலி, ஈறுவீக்கம் குணமாகும்.

 15 கிராம் அளவு சூரணத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் உள்ள இளஞ்சூடான வெந்நீரில் கலந்து, அதில் ஆசனவாய் படும்படியாக பத்து நிமிடம் அமர, ஆசன வாய் வலி உடனே குறையும். சலம் வரும் பவுத்திரம், வெளிமூல சதை வளர்ச்சி படிப்படியாகக் குறையும்.

10 கிராம் சூரணத்துடன் 400 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைத்து 100 மிலியாக வற்ற வைத்து வடிகட்டி புண்களைக் கழுவ, புண் விரைந்து ஆறும். நீரிழிவு நோய் என முத்திரை குத்தப்பட்டு தவறான வாழ்வியல் முறையினால் வரும் புண்கள், நாட்பட்ட புண்களைக் கழுவும் நீராக இதனைப் பயன்படுத்தலாம்.

 சிறிய வெட்டுக்காயங்கள், சலம் வரும் புண்கள் மீது திரிபலா சூரணத்தை வைத்து அழுத்திப் பிடிக்க அவை குணமாகும்.

 கண் நோய் குணமாகும்.

கண்ணோய்களுக்கு,10கிராம் அளவு சூரணத்தை இரண்டு குவளை நீருடன் கொதிக்க வைத்து, ஒரு குவளை நீராக வற்ற வைத்து வடிகட்டி கழுவு நீராகப் பயன்படுத்தலாம். ஒரு சுத்தமான வெண்ணிற பருத்தி துணியை மேற்கண்ட நீரில் நனைத்து கண்கள் மீது பற்றிட, கண்ணிலிருந்து நீர் வடிதல், அதிகமான பீளை சாடுதல், கண்வலி இவை குணமாகும்.

பெண்களுக்கு காணும் வெள்ளை நோய்க்கு, 20 கிராம் அளவு சூரணத்தை அரை லிட்டர் இளஞ்சூடான நீருடன் கலந்து வடிகட்டி கழுவு நீராகப் பயன்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்தும் 
திரிபலா சூரணம்

     திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இவை மூன்றையும் குறிப்பதாகும். இம்மூன்றும் இணைந்து தரப்படும் மருந்து.

திரிபலா ஆறு சுவைகளையும் கொண்ட அற்புதமான மருந்து:

ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். 

சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம். மேலும்,

 சீரண கோளாறுகள் குணமாகும்:

செரிமான பாதிப்புகள், குடல் இயக்கத்தை சீராக்கி, இரத்த கொழுப்புகளை கரைக்கும் கல்லீரல் சுரப்பை அதிகரித்து, உடலின் கார அமில நிலையை சீராக பராமரிப்பதில் பேருதவி புரிகிறது.

வயிற்றுப் பூச்சிகளை விரட்டும்,,,

வயிற்றின் விஷ பாதிப்புகளை நீக்கி, மலச்சிக்கல் கோளாறுகளை போக்கும் சிறந்த மலமிளக்கியாக செயலாற்றும், வயிற்றில் உண்டாகும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை வெளியேற்றி, மீண்டும் அந்த பாதிப்புகள் வயிற்றில் ஏற்படாதவாறு, குடலில் நச்சு தடுப்பு அமைப்பை உண்டாக்கி, உடல் நலம் காக்கிறது, திரிபலா.

இரத்த சோகையை குணப்படுத்தும்:

ஹீமோ குளோபின் எனும் இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து, இரத்த சோகை பாதிப்புகளை களையும் ஆற்றல் மிக்கது, கணைய இயக்கத்தை சரியாக்கி, இன்சுலின் சுரப்பு மூலம், உடலில் சர்க்கரை சம நிலையை உண்டாக்கி, சர்க்கரை பாதிப்புகளை நீக்கக் கூடியது, திரிபலா.

உடல் பருமனை குறைக்கும்:

உடல் கொழுப்பை உண்டாக்கும் செல்களை அழித்து, உடல் பருமனைக் குறைத்து, உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது, திரிபலா. சுவாச பாதிப்புகளை சரியாக்கி, இரத்த நாள அடைப்புகளைப் போக்கி, இரத்தத்தை சுத்தம் செய்து, சரும பாதிப்புகளை நீக்கும், சைனஸ் கோளாறுகளை சரி செய்து, உடலில் சளித் தொல்லைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் மிக்கது.

 ஒற்றைத் தலைவலி:

மைக்ரேன் உள்ளிட்ட தலைவலிகளுக்கு சிறந்த தீர்வாகி, வலிகளை போக்குகிறது. சமீபத்திய ஆய்வுகள், புற்று வியாதியை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, வியாதியை போக்கும் வல்லமை, திரிபலாவுக்கு இருப்பதாகக் கூறுகின்றன.

வயிற்றுப் புண்கள்:

மருந்துகள் அதிகம் எடுத்து, பசியின்மை மற்றும் வயிற்றுப் புண்களால் சிரமப்படுவோர், தினமும் உணவு சாப்பிட்டபின், இரு வேளை, திரிபலாவை தேனில் கலந்தோ அல்லது வெறுமனோ, சாப்பிட்டு தண்ணீர் பருகி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கும்.

 சரும வியாதிகள்:

அனைத்து பாதிப்புகளுக்கும் திரிபலாவை சூரணம் எனும் பொடியாகவே, தினமும் சாப்பிட்டு வரலாம். இரவில் திரிபலா பொடியை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் பருகி வர, மலச்சிக்கல் நீங்கும், நரையை போக்கும், சரும வியாதிகளை விலக்கும்.

 தலையில் முடி உதிர்ந்து சொட்டை ஆவதை தடுக்க,,,,

தலைமுடி உதிர்வு மற்றும் சொட்டை எனப்படும் முடி அடர்த்தியாக கொட்டுதல் போன்ற பாதிப்புகளுக்கு, திரிபலா பொடியை சோற்றுக் கற்றாழை சதையுடன் கலந்து தலையில் தடவி ஊறவைத்து, தலையை அலசி வர, முடி உதிர்தல் நின்று, விரைவில் முடி அடர்த்தியாக வளரும். மேலும், திரிபலாவை ஊறவைத்த தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்து முழுகி வந்தாலும், தலை முடி உதிர்தல் நிற்கும் என்கிறது, சித்த மருத்துவம்.

பல்வலி:

திரிபலாவை வெந்நீரில் கலந்து தினமும் வாய் கொப்புளித்து வர, பற்களில் ஏற்படும் பல் வலி, பல் சொத்தை போன்ற பாதிப்புகள், வாய் துர்நாற்றம் முதலியவை நீங்கும். திரிபலா நீரில் கழுவி வர, உடலில் உள்ள ஆறாத புண்களும் விரைவில் ஆறிவிடும்.

திரிபலா பானம்

👉 தேவையானவை:

திரிபலா பொடி தேவையான அளவு

தேன் தலா  ஒரு டீஸ்பூன்,  

முட்டைகோஸ் சாறு  - ஒரு கப்.

செய்முறை:

முட்டைகோஸ் சாற்றுடன் திரிபலா பொடி, தேன் சேர்த்துக் கலந்து பருகவும். தினமும் இந்தப் பானத்தை காலை வேளையில் அல்லது  11 மணி அளவில் குடித்து வரலாம்.

👉 பயன்கள்:

இதை அருந்தி வந்தால், உடல் எடை சரசரவென குறைவது நன்றாகத் தெரியும். ஒரு கப் முட்டைகோஸில் வெறும் 14 கலோரிகள்தான் உள்ளன.  திரிபலா ஒரு காயகல்பமாகும்.  இது உள்ளுறுப்பு இயக்கத்தைச் சீர்செய்யவும் உதவும்.

நீரிழிவைக் குணமாக்கும் திரிபலா மூலிகைக் கூட்டு மருந்து

சிறுகுறிஞ்சான் – 100 கிராம்

அருகம்புல் – 50 கிராம்

நாவல்கொட்டை – 50 கிராம்

மருதம்பட்டை – 50 கிராம்

திரிபலா – 50 கிராம்

இவைகள் அனைத்தையும் பொடி செய்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும். வேளைக்கு 2 கிராம் வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் உணவுக்கு பின் சாப்பிட வேண்டும். இவ்வாறு இரு மண்டலம் (96 நாட்கள்) தொடர்ந்து சாப்பிட நிரந்தர குணம் கிடைக்கும்.

நீரிழிவு நோயாளிகளின் பாலியல் குறைபாடு நீங்கும் திரிபலா…

திரிபலா – 100 கிராம்

கீழா நெல்லி – 100 கிராம்

மஞ்சள் கரிசாலை – 100 கிராம்

தூதுவளை – 100 கிராம்

கறிவேப்பிலை – 100 கிராம்

மல்லி இலை சூரணம்- 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

பிரண்டை – 100 கிராம்

கருஞ்சீரகம் – 50 கிராம்

அன்னபேதி செந்தூரம் – 40 கிராம்

இவையனைத்தையும் ஒன்றுகலந்து தூள் செய்து தொடர்ந்து காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டுவர, உடலில் இரத்தம், இரத்த ஓட்டம் சீராகி நரம்பு மண்டலம் பலப்படும். நீரிழிவினால் ஏற்படும் செக்ஸ் குறைபாடு தீரும். இது எமது கைகண்ட அனுபவ முறை.

வருமுன் காக்கும் நோய்கள்:

அனைத்துவகையான
(200 வகை புற்று நோய்கள் உள்ளது)
புற்று நோய்கள்.

வைரஸ்,பேக்டீரியா, பங்கஸ், 

தொற்று நோய்கள்

இளைமையில் முதுமை

முதுமையை தள்ளிபோடும்

தோல் நோய்கள்

சர்க்கரை நோய்

இரத்த அழுத்தம்

அனைத்து வகையான உயிர் கொல்லி நோய்கள்.

*குறிப்பு:*

எளிதான தயாரிப்பு முறையாகையால் நாமே செய்து பயன்படுத்தினால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

திரிபலா சூரணத்தை உட்கொண்டு சரியான வாழ்வியல் முறையையும் கடைபிடிக்கும் பட்சத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியப்படும்.

திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில்கொள்ளவும்.

மொத்தத்தில் உடம்பைப் பேணிப் பாதுகாக்கும் தன்மை திரிபலாவிற்கு உண்டு. 

திரிபலா சேர்க்காத சித்த மருந்தே இல்லை எனலாம். 

உடல் நோவினைத் தடுக்கவும் திரிபலா ஒரு நல்ல மருந்து.

 மொத்தத்தில் உடலில் உள்ள அனைத்து கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இறைவன் தந்த அற்புதமான அதிசய மருந்து திரிபாலா என்பதை நாம் அறிந்து பயன்படுத்துவோம்.