எதையும் சிந்தித்து முடிவெடுங்கள்..!!

அதிக விஷயம், விஷமேயாகும்..!!
(முழுவதையும் படித்துவிட்டு பகிருங்கள்)

எதையும் சிந்தித்து முடிவெடுங்கள்..!!

● இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.

வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர் படுத்தேன்.

குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..

படுக்கவிடாமல் படுத்துறங்களே...

● காலையில் நடக்க சொன்னார்கள்.. நடந்தேன்.
நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

● காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.

போதாது போதாது.. 

அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..
கேன்சர் உறுதியாக வராதாம்.!!

● உருளைக்கிழங்கு அளவோடுதான்
ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
வாயு என்றார்..
வாயில் படுவதை மறந்தேன்...
உலக நாடுகளில் இது மட்டும்தான்...
வேற வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்...

● இனிப்பை தொட்டுவிடாதீர்கள்..
அவ்வளவுதான்..
Sugar ஏற்றிவிடும் என்றார்..
சரி என்று நிறுத்தினேன்.

● நடக்கும் போது நண்பர் சொன்னார்..
low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க..
அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார்..

● இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்...
ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்...
குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை...
தந்திரமா குளிக்கனும் என்றார்.

● காபி, டீ வேண்டாம்,
அரிசி கஞ்சி வேண்டாம்,
பால் வேண்டாம்,
ஐஸ் வாட்டர் வேண்டாம்,
பாட்டில் ஜூஸ் வேண்டாம்
என்றார்...
சரி என்று பழகினேன்..

ஒன்று புரிந்தது..

ஒன்றும் தெரியாமல் இருந்தாலும்
ஆபத்து,
அதிகமாகத் தெரிந்தாலும்
ஆபத்து..

"Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு..

Too much informations will make you to suffer from distinguishing between useful & useless informations.

நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்,
உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி
உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...

★ எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து..
ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..

வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த
ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?

அதிக விஷயம்,  விஷம்.

இயல்பா இருங்க. ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது.