பாதத்தை பட்டுப்போல வைத்துக் கொள்ள...

பாதத்தை பட்டுப்போல வைத்துக் கொள்ள...

பாத வெடிப்புக்கு காரணம், உடலில் ஈரப்பதம் குறைந்து போவதும், தோல் வறட்சியும்,அதிக உடல் எடையும்தான் காரணம்.

நம் காலில் உள்ள தோல் மிகவும் தடினமாக இருக்கும். அதற்குக் கீழே ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும.
உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.

வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் பாதத்தை கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பாதங்களில் விளக்கெண்ணெய் தடவுவது, ஆலிவ் ஆயில் தடவுவது, கற்றாழை ஜெல் தடவுவது இவை
பாத வெடிப்பில் இருந்து பாதுகாக்கும்.

பாத வெடிப்பில் நோய் கிருமி தொற்றாமல்  பார்த்துக்
கொள்ள வேண்டும். தொற்று ஏற்பட்டால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இல்லையென்றால் நோய் கால் முழுக்கப் பரவிவிடும்.

நீர்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல்
பருமனாக இருந்தால் எடை குறைப்பதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

ஒயிட் பீல்ட் ஆயின்மென்ட் சிறந்தது. கம்பெனி மருந்தைவிட நாட்டு ஆயின்மென்ட் நல்லப் பயனைத்
தருகிறது.