துல்லியமான கண் பார்வையை பெற இதையெல்லாம் சாப்பிடுங்கள்! கண் கோளாறுகள் இனி இல்லை...

துல்லியமான கண் பார்வையை பெற இதையெல்லாம் சாப்பிடுங்கள்! கண் கோளாறுகள் இனி இல்லை...

கண்கள் தொடர்பான பிரச்சினைகள் முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே வரும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இளம் சிறார்கள் கூட கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூக்கு கண்ணாடி அணிவதை காணமுடிகிறது.

அந்த வகையில் கண் பார்வை சரியாகி தூரத்தில் இருக்கும் விடயங்களை கூட தெளிவாக தெரிய சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை காண்போம்.

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.

ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக் கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

ஒரு வேளை உணவில் நெய் சேர்த்துக்கொள்வது, தினமும் மதிய உணவில் சிறு கீரை, பண்ணை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் பார்வை குறைபாடு சரியாகும்.