நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவர இது போதும்!
நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவர இது போதும்!
முட்கள் நிறைந்த பியர் கற்றாழை (pear cactus) என்று அழைக்கப்படும் நோபல் கற்றாழை (Nopal cactus), அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளிலும் மெக்சிகோவிலும் அதிகமாக காணப்படுகிறது. மெக்ஸிகோவின் சில பகுதிகளில் உள்ள உணவுகளில் நோபல் கற்றாழை ஒரு பொதுவான காய்கறியாக பயன்படுத்தப்படுகிறது.
இதனை முற்றிய பிறகு சாப்பிட மிக கடினமாக இருக்குமாம். ஆகவே இளமையான பருவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நோபல் கற்றாழையைப் பல வழிகளில் பயன்படுத்துகின்றனர். இதில் வைட்டமின் பி 6, இரும்பு, நார், தாமிரம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ரைபோஃப்ளேவின், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதன் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. வைரஸ்களை கட்டுப்படுத்துகிறது :
வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த பாதுகாப்பு பண்புகளை நோபல் கற்றாழை கொண்டுள்ளது. அதாவது சில ஆரம்ப ஆராய்ச்சிகளில் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (எச்.எஸ்.வி), ரெசிபிராடோரி சினசிடியால் வைரஸ் (ஆர்.எஸ்.வி) மற்றும் எச்.ஐ.வி ஆகியவற்றிற்கு எதிரான வைரஸ் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2. நரம்பு செல்களைப் பாதுகாக்கிறது :
மற்ற எல்லா உயிரணுக்களையும் போல நம்முடைய உடலில் காணப்படும் நரம்பு செல்களும் சேதமடையக்கூடியவை. இது உணர்ச்சி இழப்பு அல்லது வலிகளை ஏற்படுத்தும். நோபல் கற்றாழை சாப்பிடுவது நரம்பு செல் சேதம் மற்றும் செயல்பாடு இழப்பிலிருந்து உடலை பாதுகாப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
3. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் :
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நம் உடலில் இருக்கும் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்கக் கூடியவை. நோபல் கற்றாழை ஆன்டி ஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளது. மேலும் 2013 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி கற்றாழை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த ஆக்ஸிஜனேற்றிகள் வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் பயனளிக்க கூடியவை.
4. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் :
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிக கடினம். ஆனால் நோபல் கற்றாழை இதற்கு நல்ல தீர்வை வழங்குவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
5. புற்றுநோய் :
சில ஆண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் வளர்ச்சி ஆகும். அடிக்கடி நோபல் கற்றாழை சாப்பிடுவது விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்டுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவது மட்டுமல்லாமல் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
6. கொழுப்பை கட்டுப்படுத்தும் :
நோபல் கற்றாழை அடிக்கடி சாப்பிடுவது கொழுப்பைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
7. அல்சர் :
இரைப்பை புண்களைக் குணப்படுத்த உதவும் மருந்துகளை செய்ய பல ஆண்டுகளாக நோபால் கற்றாழை சிசிலி பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
8. சிறந்த தூக்கம் :
தூக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு பயனுள்ள காய்கறியாக நோபல் கற்றாழை உள்ளது. ஆகவே தூக்க பிரச்சினை உடையவர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தலாம்.