தினமும் பாலுடன் இந்த இரண்டு பொருளையும் கலந்து குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தினமும் பாலுடன் இந்த இரண்டு பொருளையும் கலந்து குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பால் குடிப்பது உடலில் பலவித ஆரோக்கிய குணங்களை தருகின்றது. எலும்புகள் ஆரோக்கியம் மேம்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் பெறுகிறோம். ஆனால் பாலுடன் மஞ்சள், பெருஞ்சீரகம் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து அருந்துவது கூடுதல் நன்மைகளை தருகிறது.

பாலில் ஆரோக்கியமான கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ள நிலையில் இதனுடன் பெருஞ்சீரகத்தை சேர்ப்பதால் கூடுதல் சுவையையும், ஊட்டச்சத்தையும் சேர்க்கிறது. தினசரி உணவில் பாலுடன், பெருஞ்சீரகம், மஞ்சள் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள் :

மாதவிடாய் பிரச்சினைகள் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படுகிறது. இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்றில் வலி மற்றும் ரத்த போக்கும் அதிகரிக்கிறது. எனவே அந்த நேரத்தில் பெருஞ்சீரகம் கலந்த பாலை அருந்தி வந்தால் மாதவிடாய் வலி குணமாகும்.

பாலில் புரதம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இதேபோல பெருஞ்சீரகம் கால்சியம், மாங்கனீசு ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும். எனவே கொதிக்கும் பாலில் பெருஞ்சீரகம் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும்.

பெருஞ்சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது, இது கண்புரை மற்றும் பிற பார்வை தொடர்பான பிரச்சினைகளை குறைக்க உதவுகிறது. வைட்டமின் ஈ நிறைந்த பாதாம், திராட்சை மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் கலந்து சாப்பிடுவதன் மூலம் பார்வைத் திறன் மேம்படும்.

மேலும் இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி பருவகால வியாதிகளைத் தடுக்க உதவும். மேலும் பெருஞ்சீரகம் கலந்த பாலில் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் இருப்பது சுவாச நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.