பக்கவாதத்தை குணமாக்கும் வாத லேகியம் :

பக்கவாதத்தை குணமாக்கும் வாத லேகியம் :

     சித்திரமூலம், மிளகரணை, வேலிப்பருத்தி, சாரணை, நொச்சி, மாவிலங்கு, கொன்றை, வெள்ளெருக்கு, ஆடாதொடை ஆகியவற்றின் வேர்ப்பட்டையை வகைக்கு 20 கிராம் எடுத்துத் தூளாக்கி ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

     சுக்கு, மிளகு, கடுகு, பெருஞ்சீரகம், கடுக்காய், ஓமம், கழற்சிப் பருப்பு, இலுப்பைபருப்பு, எட்டிக்காய், பிரண்டை, நிலாவரை, பூண்டு ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்து சூரணித்து, முன்பு உள்ள சூரணத்துடன் கலந்து கொள்ளவும்.

     வெல்லம் ஒன்றரை கிலோ எடுத்து பாகு செய்து, மேற்படி சூரணத்தை சேர்த்து கிண்டி லேகியமாக்கவும். லேகியம் ஆறியதும் 200 கிராம் நெய் மற்றும் 150 கிராம் தேன் சேர்த்துப் பத்திரப்படுத்தவும். காலை மற்றும் மதியம் உணவுக்குப்பின் தொடர்ந்து சாப்பிட பக்கவாதம், முடக்குவாதம், அண்டவாதம், சூலைவாதம், வாயுக்குத்து, குடல் வாயு, குதிகால் வாதம் இவை அனைத்தும் தீரும்.