வயிறு சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் தரும் சுரைக்காய் !

வயிறு சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் தரும் சுரைக்காய் !!

தினமும் ஒரு வேளை சுரைக்காய் உணவில் எடுத்துக் கொண்டால் குடல் புண்கள், மலச்சிக்கல், மூலநோய் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கிறது. உணவு நன்கு செரிமானம் ஆகும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சினைகளில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும்.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அடிக்கடி எடுத்துக் கொண்டால் பித்தம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும். மேலும், நரம்புகளுக்கு புத்துணர்ச்சியை அளித்து உடலை வலுப்படுத்தும்.

கண் எரிச்சல், கண் வலி போன்ற பிரச்சனைகள் மற்றும் கண் குறைபாடுகளை போக்க சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.