இந்த டீ அருந்தினால் சளி தொல்லையே இருக்காது!

இந்த டீ அருந்தினால் சளி தொல்லையே இருக்காது!

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்து இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை ஏற்படுத்தும். இதற்கு கற்பூரவள்ளி இலை சிறந்த மருந்து .

இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இருமல், சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த கற்பூரவள்ளி டீயை தயாரித்து குடிக்கலாம். இந்த கற்பூரவள்ளி டீயை எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 
தேவையான பொருட்கள் :

கற்பூரவள்ளி இலைகள் – 6
டீத்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன்
எலுமிச்சை – பாதி
தேன் – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்

செய்முறை :

முதலாவது கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளுங்கள் . அதன்பின் பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், கற்பூரவள்ளி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

இது நன்கு கொதித்து வெந்ததும் அதனை வடிகட்டி அதில் எலுமிச்சையை சாறு பிழிந்து விட்டு அதில் தேவையான அளவு தேன் கலந்து குடித்து வந்தால் இருமல், சளி தொல்லையிலிருந்து விடுபடலாம்.