புளியங்கொட்டையில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

தூக்கி ஏறியும் புளியங்கொட்டையில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

உணவு வகைகளில் புளிக்கு பெரும் பங்கு உண்டு என்றே சொல்லலாம். ஊறுகாய், சட்னி மட்டுமின்றி சில வகை பிரியாணிகளில் கூட புளி சுவைக்காக சேர்க்கப்படுகிறது.

100 கிராம் புளியில் கால்சியம் , இரும்புச் சத்து , விட்டமின் சி , விட்டமின் ஏ, பொட்டாசியம் , நியசின் , பாஸ்பரஸ் , மக்னீசியம் , நார்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. 

 புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பல்வேறு நன்மைகளைக் கொண்ட புளியைப் போல் புளியங் கொட்டையும் பல நன்மைகள் கொண்டது.

அந்தவகையில் புளியங்கொட்டையில் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

* சிகரெட் மற்றும் குளிர் பானங்களை அதிகம் உட்கொள்ளும் நபர்களுக்கு பற்களில் கறை மற்றும் பிளேக் ஏற்படும். இதுபோன்ற சமயத்தில், புளியங்கொட்டையின் தூளை பேஸ்ட் உடன் கலந்து பல் துலக்கலாம். இதனால் பற்களின் கறைகள் நீங்குவதோடு, பற்களின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படும். 

* புளியங்கொட்டையின் சாறு வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும், அதிலும் குறிப்பாக அஜீரணத்தை குணப்படுத்தும். புளியங்கொட்டையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, செரிமானத்தை சீராகவும், மேம்படுத்த உதவுகிறது.

* புளியங்கொட்டை, உங்கள் சருமத்தை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், சிறுநீர் பாதை மற்றும் உணவுக்குழாய் நோய்த்தொற்றுகளை சரி செய்ய புளியங்கொட்டையின் சாறினை குடிக்கலாம்.

* தினமும் இரவில் தூங்கச் செல்லும்முன் வெதுவெதுப்பாக நீரில் புளியங்கொட்டையை வறுத்து பொடி செய்ததை ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

* புளியங்கொட்டையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்து உள்ளது. இதன் விளைவாக இதயப் பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த புளியங்கொட்டையைப் பயன்படுத்தலாம்.