முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுக்கை நீக்கும் வெள்ளரிக்காய் !!

முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுக்கை நீக்கும் வெள்ளரிக்காய் !!

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்த வெள்ளரிக்காய் சருமத்தை இறுகச் செய்து சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்தை மாற்றுகிறது.

சூரிய கதிர்களால் ஏற்படும் டேனை போக்கி ஒரு இயற்கை பிளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. முகத்தில் உள்ள தழும்புகளை மறையச் செய்கிறது.

வெள்ளரிக்காயில் உள்ள மாங்கனீசு மற்றும் பீட்டா கரோட்டின் சருமத்திற்கு குணப்படுத்தும் தன்மையை அளிக்கிறது. இதனை ஒரு மாய்சரைசராகவும் பயன்படுத்தலாம். முகத்தின் கருமையை போக்கி நிறத்தை மேம்படுத்துகிறது. 

வெள்ளரிக்காயை பிற இயற்கை பொருட்களான தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றுடன் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். 

கண்களுக்கு கீழ் காணப்படும் கருவளையங்களுக்கு சிறந்த மருந்து வெள்ளரிக்காய். இதனை வெட்டி கண்களில் வைத்து கொள்ளும் போது குளிர்ச்சியை அளித்து கருமையை போக்கி கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

வெள்ளரிக்காய் சாறு அல்லது அதனை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தின் கருமை மாறி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
 
வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இதன் மூலம் சருமத்தில் ஏற்படும் உள்வீக்கத்தை குறைத்து பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுக்கை நீக்குகிறது.