வெற்றிலையை கொண்டு உடல்நோய்களை போக்கமுடியுமா...?

வெற்றிலையை கொண்டு உடல்நோய்களை போக்கமுடியுமா...?

நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக “வெற்றிலை” சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. இந்த வெற்றிலை கொண்டு எத்தகைய உடற்குறைபாடுகளையும், நோய்களையும் தீர்க்கலாம்

வெற்றிலைகளை நன்கு கசக்கி அதன் சாறு அருந்துவதால் உடனடியாக தலைவலி குறையும். மேலும் வெற்றிலைகளை நெற்றியில் வைத்து, ஒரு துணியால் கட்டிக்கொண்டு தூங்கினால், மீண்டும் எழுந்திருக்கும் போது தலைவலி முற்றிலும் நீங்கியிருக்கும்.

வாயு தொல்லை நீங்க வெற்றிலை ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. நமது உடலில் வாதம் தன்மை அதிகரிக்கும் போது வயிற்றில் வாயு தொல்லை போன்றவை ஏற்படுகின்றது.
 
வெட்டு காயம், அடிபட்ட காயம், புண் போன்றவை உடனே ஆற சிறிதளவு வெற்றிலையை எடுத்து அரைத்து அவற்றை காயங்கள் மீது பூசுவதினால் காயங்கள் மிக விரைவில் ஆற ஆரம்பிக்கும்.
 
பலவகையான உணவுகளை சாப்பிடும் போது அந்த உணவில் இருக்கும் பாதகமான பொருட்கள், உணவு துணுக்குகள் போன்றவை பல்லிடுக்குகளில் மாட்டிக்கொள்கிறது. எத்தகைய உணவை சாப்பிட்ட பின்பும், வெற்றிலைகளை நன்கு மென்று அதன் சாறுகள் பற்கள், ஈறுகளில் தங்கியிருக்கும் கிருமிகளை அழிக்கிறது. பற்சொத்தை, பற்கூச்சம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
 
ஒரு வெற்றிலையை எடுத்து அதனுடன் சிறிதளவு பாக்கு மற்றும் சுண்ணாம்பு தடவி சாப்பிடுவதனால் பசி இன்மை நீங்கும்.