பழங்களும் பயனும் அறிந்து கொள்வோம்..

பழங்களும் பயனும் அறிந்து கொள்வோம்..

1. மலச்சிக்கலைப் போக்கும் நறுவிலிப் பழம்: நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின் போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

 2. தாகம் தணிக்கும் ஆல்பகோடாப் பழம் காய்ச்சல் வந்தபின் நாக்கு ருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும். 

3. இளமை தரும் தக்காளி இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும். 

4. பேதியை நிறுத்தும் எலுமிச்சம்பழம். எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

5. இன்பம் தரும் இனிப்புக் கமலா இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத் தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

6. விக்கலை நிறுத்தும் கொய்யாப் பழம் கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும். 

7. தலைக் கனம் குறைக்கும் களாப்பழம். களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும். 

8. கருப்பைக்கு வலிமை தரும் மாதுளை மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

9. வாய்வுக்கும் நாரத்தம் பழம்.  நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும். 

10. கண்ணொளி தரும் முந்திரிப் பழம்.  கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும். 

11. வெண்மேகம் தீர்க்கும் கண்டங் கத்திரிப்பழம்.  கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும். 

12. காச நோய்க்குத் தூதுளம் பழம்.  தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும். 

13. கபால நரம்புகள் பலம் பெறப் பலாப்பழம். பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

14. பசியைத் 'துண்டும் இலந்தைப் பழம்.  பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும். 

15. தாது விருத்தி தரும் திராட்சை.  உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு கரண்டி சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும். 

16. பப்பாளிப் பழம். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும். 

17. வாழைப்பழம். மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும். 

18. வில்வப் பழம் பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும். 

19. அரசம் பழம் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது. 

20. சீமை அத்திப்பழம்  மூட்டு வலியைப் போக்கி ரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும். 

21. பேரீச்சம் பழம் இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.

22. தர்பூசணிப் பழம் கோடைக்கால வெப்பத்தைத் 
தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம். 

23. முலாம் பழம் மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

24. விளாம்பழம் பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள். விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும். 

25. அன்னாசிப் பழம் குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச்சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டுவர, தொண்டைக்கட்டு நீங்கும்.