சதகுப்பை மருத்துவ பலன்கள்

சதகுப்பை மருத்துவ பலன்கள்

சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இவற்றை சம அளவு  அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை,மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும்.  

கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.

இரத்த அழுத்த நோய் குறைய கருங்காலிப்பட்டை, சதகுப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து சுண்டவைத்து சாப்பிட இரத்த அழுத்த நோய்  குறையும்.

இரத்த சோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள்  மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும்.

 சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும். மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி வடிகட்டிய தூளை தேன் சேர்த்து சாப்பிட்டால் முறையாக பசி ஏற்படும்.

ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி கொடுத்துவர வயிற்று வலி குறையும். சதகுப்பை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.

 
இஞ்சி மற்றும் புதினா கீரை சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும். பற்பாடகம், நிலவேம்பு, சீரகம், சுக்கு, அதிமதுரம் இவைகளை நைத்து சுண்டக்காய்ச்சி குடித்து வர காய்ச்சல் குறையும்.