பல்வேறு நோய்களுக்கு அற்புத தீர்வாகும் இலுப்பை எண்ணெய் !!

பல்வேறு நோய்களுக்கு அற்புத தீர்வாகும் இலுப்பை எண்ணெய் !!

நஞ்சு பூச்சி கடி, கரப்பான், கடுமையான இடுப்பு வலி இவற்றிற்கு இலுப்பை எண்ணெய்யை தடவி வந்தால் எளிதில் குணமடையலாம். நரம்பு பலவீனத்தால் உண்டாகக்கூடிய நடுக்கம், வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணி.

இடுப்பு வலி, மூட்டு வலி, கை, கால்கள் வலி ஆகியவற்றிற்கு இலுப்பை எண்ணெய்யை, சிறிது மென்மையாக சூடேற்றி, அதை தடவி பின்னர் மிதமான வெந்நீரில் சுத்தம் செய்து, தூய்மைப்படுத்திக் கொண்டால் எளிதில் குணமடையும்.

ஆண்களுக்கு ஏற்படும் விரை வீக்கம் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு இலுப்பை எண்ணெய் ஒரு அற்புதமான மருந்து. இந்த எண்ணெய்யை சிறிது சூடுபடுத்தி நான்கைந்து முறை தடவி வந்தாலே இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம்.

சருமத்தை மிருதுவாக்கும், தோல் சுருக்கங்களை நீக்கும். வாரம் ஒரு முறை நன்றாக உடலில் தேய்த்து ஒரு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான சுடுநீரில் இதை கழுவி குளித்து வந்தால், சருமம் பளபளப்பாக அற்புதமாக இருக்கும்.

விஷப்பூச்சிகள் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கும் சக்தி வாய்ந்தது இந்த அற்புதமான எண்ணெய். விஷப் பூச்சிகளின் கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம் போன்றவற்றை சரி படுத்தும் தன்மையுடையது.

கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் உண்டாகும், வயிற்றுப்போக்கு போன்றவற்றை எளிதில் குணமாக்கும் தன்மை உடையது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்றவற்றிற்கும் இந்த எண்ணெய் அருமையான மருந்து ஆகும்.

வயிற்றில் செரிமான மண்டலத்தை சீர் அடையச் செய்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை உடையது. சில துளிகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காச நோய் கிருமிகளையும் ஆஸ்துமா கிருமிகளையும் அழிக்கும் தன்மை வாய்ந்தது.