முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது ஏன்?

முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது ஏன்?

பொதுவாக வயது முதிர்தல் என்பதை நாம் பிறந்த ஆண்டை கொண்டு கணிப்பித்து காலத்துக்கு முன்னமே நாம் முதிர்ந்து போகிறோம். 25, 30 வயது வரை நாம் நம்மை சிறப்பாக பேணி வருவதுவும் பின்னர் அப்படியே கை விட்டு விட்டு ஏனோ தானோ என்று வாழ முற்படும் பொழுது உடல் விரைவில் முதிர்ந்து போகிறது.

சிலர் இளம் வயதிலேயே ஒரு முதிர்ந்த தோற்றத்தை பெறுகிறார்கள். ஆனால் சிலரோ வயது ஆனாலும் இளமையான தோற்றத்தை கொண்டுள்ளார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?

பொதுவாக உடலுக்கு என்று ஒரு வயது உள்ளது. அதுவே உண்மையான வயது. அதனை Biological Age என்று சொல்லுவார்கள். அந்த சரீரத்துக்கான வயதை ஆரோக்கியமான உணவும், சரியான உறக்கமும், சுறுசுறுப்பான வாழ்வியலும் தான் தக்க வைக்கின்றன. இவை சரியாக இல்லாத பொழுது தான் உண்மையான வயது முதிர்தல் ஆரம்பிக்கின்றது.

பொதுவாக முகத்தில் மற்றும் தோலில் சுருக்கங்கள் விழாமல் இருக்க சில புரோட்டீன்கள் காரணமாக இருக்கின்றன. அதில் முக்கியமானது Collagen எனப்படும் புரோட்டீன். இது தோலில் உள்ள களங்களை ஒன்றோடொன்று இறுக்கி வைக்கும் ஒரு பசையாக தொழில் படுகிறது.

இதனோடு Elastin என்ற ப்ரோட்டீன் தோல் விரிந்து சுருங்குதலுக்கு ஏதுவாக ஒரு இலாஸ்டிக் போன்று நெகிழ்வு தன்மையை கொடுக்கும். இந்த புரோட்டீன்கள் தோலில் குறையும் பொழுதே தோல் சுருங்க ஆரம்பிக்கிறது.

உடலில் மற்ற பகுதிகளை விட முகத்தில் அதிகமாக தொய்வுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றுவதற்கு காரணம் நாம் அழுகை, கோபம், கவலை போன்ற எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் தான் அதிகமாக காட்டுகிறோம். அதன் தாக்கமே முகத்தில் சுருக்கங்கள் வெளி தோன்ற காரணமாகின்றன. தலை முடி பிரச்சினைகள் தோன்றவும் இதுவே காரணமாகின்றது.

Collagen மற்றும் Elastin சத்துக்கள் குறைவதற்கான காரணிகளும், சுருக்கங்கள் தோன்றுவதற்கான காரணிகளும்..............

வெயில் பொழுதுகளில் வெளியே திரிவது
புகை பிடித்தல்
மது அருந்துதல்
ஆரோக்கியமற்ற உணவுகள்
போதியளவு நீர் அருந்தாமை
மருந்துகளின் பாவனைகள்
வெள்ளை சீனி சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமாக உண்ணுதல்
அதிகமாக காப்பி, தேநீர் குடித்தல்
அதீத மன அழுத்தம் மற்றும் கவலைகள்
சோர்வான வாழ்வியல்
இரவில் கண் விழித்திருத்தல்
உயரமான தலையணைகள்
ஒப்பனை பொருட்கள்
ரசாயன கலப்பு மிக்க முகப்பூச்சுகள், ஷாம்பு, சோப்பு போன்றன

Collagen மற்றும் Elastin சத்துக்களை எவ்வாறு முறையாக பேணுவது, முக சுருக்கங்களை எவ்வாறு தவிர்ப்பது போன்றவற்றை அடுத்த பதிவில் தருகிறேன்.