நீங்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா?

நீங்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா?

மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியமான தேவையாகும். 

நம் உடல் 60 முதல் 70 சதவிகிதம் வரை தண்ணீரால் ஆனது.

 நம் உடலுக்கு போதிய அளவு தண்ணீரைக் குடிக்கா விட்டால் நமக்கு நீர் சத்து குறையும். 

போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

நாம் சரியான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து தண்ணீர் 
8 % சதவிகிதம் வரை குறையும். இப்படி குறைவதால்………… 

👉பக்கவாதம், 

👉மாரடைப்பு, 

👉இரத்தம் உறைதல் 

👉கீழ்வாதம், 

👉சிறுநீரகக் கல், 

👉எலும்பு பலவீனம், 

👉நோய் எதிர்ப்புக் குறைப்பாடு 

ஆகியவை ஏற்படும். தண்ணீர் உடலில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகக் குறைந்தால் கொலஸ்ட்ராலும் கூடும் அபாயம் உண்டு.

எல்லாம் ஒகே, நம் உடலில் போதிய தண்ணீர் இல்லை என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும். அதற்கும் சில வழிகள் இருக்கிறது. 

👉வாய் அடிக்கடி வறண்டு போகும். 
ரெகுலராக குறிப்பிட்ட நேரத்துக்கு இடைவெளியில் தண்ணீர் குடித்தால் நம் வாய், தொண்டையில் உள்ள  சளிச்சவ்வில் உராய்வு ஏற்படும் அந்த உராய்வே உமிழ்நீரைத் தக்கவைக்கும். 

👉இதேபோல் போதிய அளவு நாம் நீர் பருகாவிட்டால் தோல் உலர்ந்து காணப்படும், வறட்சியான தோலாக இருக்கும். 

👉அதீத தாகம், முகப்பரு ஆகியவையும் நாம் போதிய அளவு தண்ணீர் குடிக்காததன் அறிகுறிதான்.

🉐 மதுபானம் உடலில் இருக்கும் நீரின் அளவைக் குறைத்துவிடும். மதுப்பிரியர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் டீ-ஹைட்ரேசன் என்னும் நீர்போக்கை சரி செய்யலாம். 

👉கண்கள் உலர்ந்து இருப்பதும் போதிய அளவு நீர் பருகாததன் அறிகுறியே..

🙏🙏 இதையெல்லாம் உணர்ந்து அதிகமாக தண்ணீர் குடிப்போம். ஆபத்தில் இருந்து தப்பிப்போம். 🙏🙏