தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் இத்தனை நன்மைகளா?

தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதால் இத்தனை நன்மைகளா?

தேங்காய் எண்ணெயில் ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. குறிப்பாக பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிபினால்கள், வைட்டமின் ஈ, வைட்டமின் கே, அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

பழங்கால ஆயுர்வேத சிகிச்சை முறையின் முக்கியமான அம்சம் என்னவென்றால் தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வது. இது அந்த காலத்தில் இருந்து இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு பழக்கமாகும். 

தேங்காய் எண்ணெய்கள் கொண்டு வாய் கொப்புளிப்பதாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்யை கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் தொண்டை புண் குணமாவது மட்டுமின்றி, வாய் மற்றும் சுவாசக் குழாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் கொல்லும்.

தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் பற்களுக்கு இடையில் உள்ள தொற்றுகள் நீங்குகிறது மற்றும் உங்கள் பற்கள் ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்யை கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால், வாயில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும், ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்.

ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.  

தேங்காய் எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வாயில் வீக்கத்தைக் குறைக்கும்.

நீங்கள் தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்புளிப்பதால் தொண்டையில் உள்ள பாக்டீரியாவையும் அழிக்க முடியும். இதனால் தொண்டை அரிப்பு போன்ற பிரச்சினைகள் குணமாகும்.

மழைக்காலத்தில் அதிகமாக சளி பிடிக்கும் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் கட்டாயம் ஆயில் புல்லிங் செய்யலாம். இதனால் நாசி பகுதியில் உள்ள சளி நீங்கிவிடும்.