புண் இருந்த இடம் தெரியாமல் மறையும் அற்புத மருந்து
புண் இருந்த இடம் தெரியாமல் மறையும் அற்புத மருந்து
தேவையான பொருட்கள்
தான்றிக்காய் தோல் – 50 கிராம்
புளியங்கொட்டைத் தோல் – 20 கிராம்
சீயக்காய் – 20 கிராம்
மஞ்சள் – 20 கிராம்
ஆகியவற்றை எடுத்து ஒன்றாகக் கலந்து இளநீர் விட்டு அரைத்து வைக்கவும். பின்னர் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யை அடுப்பிலேற்றி சிறுதீயாய் எரிக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்த விழுதை கொஞ்சங் கொஞ்சமாய் சேர்க்கவும். எண்ணெய் பொரிந்து அடங்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து வடிகட்டிப் பத்திரப்படுத்தவும்.
இந்த மருந்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நல்ல மருந்து.
வாய்ப்புண்,
மூக்குப்புண்,
லேசாய் தடவிட உடனே குணமாகும்.
சேற்றுப் புண்,
வெட்டுக்காயங்கள் விரைவில் ஆறிவிடும்.
சர்க்கரை வியாதியில் உண்டாகும் புண்ணால் கை, கால்கள் வெட்டி எறியப்படுவதை இன்று சாதாரணமாய்க் காண்கிறோம். புண்களை குணமாக்க இதை பூசி வாருங்கள். புண் இருந்த இடம் தெரியாமல் மறையும்.