குக்கர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா?

குக்கர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் வருமா?

எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த உலகத்தில் அனைவரும் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் சமைப்பது என்பது பெண்களுக்கு பெரிய தலைவலியாய் இருக்கின்றது.

சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் பாழாகிவிடும். இந்த நவீன காலத்தில் சமைப்பதற்கு குக்கர் பெரிய பங்கு வகிக்கின்றது. வேலை எளிமையாக முடிவதற்காக பலரும் குழம்பு வகைகள், இறைச்சி, சாதம் போன்றவற்றை குக்கரில் சமையல் செய்கின்றனர்.

இவ்வாறு சமைக்கும் முறை உடல்நிலத்திற்கு நல்லதா? கெட்டதா? 

* மாவுச்சத்து நிறைந்த உணவுகள் குக்கரில் சமைக்கப்படும் போது ​​அவை அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனத்தை உருவாக்குகின்றன. இதனால் புற்றுநோய், கருவுறாமை மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

* குக்கரில் உணவுகளை சமைக்கும் போது லெக்டின் என்னும் தீங்கு விளைவிக்கும் இரசாயனமானது உணவில் இருக்கும் தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் உணவின் ஊட்டச்சத்து குறைந்து விடுகிறது.

* குக்கரில் சமைக்கும் போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து நீங்கிவிடும். மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கப்படவில்லை என்பதால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதானால் தீடீரென இரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

* அரிசி வேக வைப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அளவுக்கு சாப்பிட உடலுக்கு நல்லது. மேலும் குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் உடலுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுமாம்.