உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் தீர்வைத் தரும் சஞ்சீவி மருந்து

உடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் தீர்வைத் தரும் சஞ்சீவி மருந்து

தேவையான பொருட்கள்

சதகுப்பை
நற்சீரகம் 
கருஞ்சீரகம் 
மகிழம்பூ 
மகிழம் விதை 
அதிமதுரம்
சுருள் பட்டை 
இலவங்கப் பட்டை

இவைகள் அனைத்தும் வகைக்கு 25 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு 

இதனோடு

வரக் கொத்தமல்லி 200 கிராம் 
வெள்ளை கற்கண்டு 400 கிராம்

  இவைகளையும் எடுத்துக்கொண்டு இவை அனைத்தையும் இடித்து சலித்து அளவுகளின்படி ஒன்றாக சேர்த்து வைத்துக்கொண்டு 

காலை மாலை இருவேளையும் ஐந்து கிராம் அளவு எடுத்து வெந்நீருடன் கலந்து இதை தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர உடல் சார்ந்த நோய்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை தந்து ஆரோக்கியத்தை தரும் அரு மருந்தாக இந்த சஞ்சீவி சூரணம் செயல்படும்

இம்மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர ஈரல் பலப்படும் தலையில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்

குறிப்பாக 
கண் எரிச்சல் கண்ணில் நீர் வடிதல்
கண் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் போன்ற நோய்கள் நீங்கி பார்வை சக்தியை  அதிகரிக்கும்

நெஞ்செரிச்சல் குணமாகும் 
நெஞ்சு சளி விலகும் 
இதயம் பலம் பெறும்

வயிற்றுப் பூச்சிகளைக் கொன்று மலத்தின் வழியே வெளியே தள்ளும் அஜீரண நோய் குணமாகும் 
இடுப்பு வலி நீங்கும் இடுப்பின் தளர்வு நீங்கி இடுப்பு வலிமையை பெறும்

கல்லடைப்பு வருவதை தடுத்து நிறுத்தும் சிறுநீரகம் வலிமை பெறும்

தொண்டை சளி குணமாகும் 
கண்டத்தில் உண்டாகும் கப கட்டை நீக்கும்

நன்கு பசி எடுக்கும் 
நல்ல தூக்கம் வரும்

உடலில் உள்ள வலிகள் அனைத்தும் நீங்கும் உடல் அசதி உடல் சோர்வு குணமாகும் 

நோயின்றி வாழ நல்ல மருந்தாக இது அனைத்து வகையிலும் ஆரோக்கியத்தை தரும்.