நரம்பு தளர்ச்சியை நீக்கி வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

நரம்பு தளர்ச்சியை நீக்கி வலுப்பெற செய்யும் வல்லாரை கீரை !!

வல்லாரையை வாரம் ஓருமுறை கீரையாக சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்க, ஞாபக சக்தி அதிகரிக்கும். புத்தி கூர்மை உண்டாகும். சுறுசுறுப்பாக இருப்பார்கள். படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

வல்லாரை இலை சாறு மற்றும் தூதுவளை இலைசாறு இரண்டையும் கலந்து 5 மி.லி அளவு எடுத்து அருந்திவர நுரையீரல் வலுப்படும். நுரையீரலில் தேங்கியுள்ள சளி வெளியாகும். இருமல், சளி சம்மந்தமான பிரச்சினைகள் சரியாகும்.

வல்லாரை இலை , உத்தாமணி இலை மற்றும் மிளகு சிறிது சேர்த்து அரைத்து, குன்றிமணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைக்க வேண்டும். காய்ச்சல் இருப்பவர்கள் இந்த மாத்திரையை காலை மாலை என இருவேளை உண்டுவர காய்ச்சல் குணமாகும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் வல்லாரை கீரையை வாரம் இருமுறை சமைத்து உண்ண நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் பலம் பெறும். 

வல்லாரை இலை மற்றும் கீழாநெல்லி இலையை சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து தயிரில் கலந்து உண்ண நீர் எரிச்சல் குணமாகும்.

அரிசி திப்பிலியை வல்லாரை சாற்றில் ஊறவைத்து காயவைக்க வேண்டும் . இதைபோல் 7 முறை ஊறவைத்து காயவைக்க வேண்டும். பின்பு இந்த திப்பிலியை பொடிசெய்து உண்டுவர மூளை சுறுசுறுப்பாக செயல்படும் உடல் வலிமை பெறும்.

வல்லாரையை கீரையாக நாம் உண்டு வந்தோமானால் ஞாபக சக்தி  அதிகரிக்கும்,  நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலுப்பெறும், தோல் நோய்கள் சரியாகும்.