அதிமதுரத்தின் பயன்கள்
அதிமதுரத்தின் பயன்கள்
அதிமதுரம் பால்
செய்முறை விளக்கம்
அதிமதுரத்தை பசும்பால் விட்டு மை போல அரைத்து இதில் ஐந்து கிராம் எடுத்து கால் லிட்டர் பசும்பாலுடன் கலந்து இதை பாதியாக சுண்டக் காய்ச்சி இதனோடு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து தினந்தோறும் காலை வேளையில் பருகிவர தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்
குறிப்பாக
நீரிழிவு இரத்தக்கொதிப்பு, தலை மயக்கம், நாவறட்சி, அதிக தாகம், விக்கல், வாந்தி, வறட்டு இருமல், கை கால் பிடிப்பு, சுளுக்கு, தலைவலி, ஒற்றைத் தலைவலி, விஷக்காய்ச்சல், சிறுநீர் எரிச்சல், உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், கல்லீரல் பாதிப்பால் வரும் காமாலை, அதிக உஷ்ணம், உஷ்ணத்தால் ஏற்படும் இருமல், பார்வை கோளாறு, விந்து பற்றாக்குறை இவை அனைத்தும் குணமாகும்
மேலும்
உடலில் ஏற்படும் ரணம், வெறிநோய், எலும்பு சம்பந்தமான நோய்கள், சளிக்கட்டு மற்றும் மாதவிலக்கு பிரச்சனைகள், கர்ப்ப பை நோய்கள் வயிற்றுப்புண், உடலில் உள்ள கெட்ட நீர் இவை அனைத்தும் நீங்கும்
ஆண்மை குறைவு உள்ளவர்கள் நாற்பது நாட்கள் இதை பருகி வர விந்து உற்பத்தி அதிகரிக்கும்
வாரத்திற்கு இரண்டு முறை அதிமதுர பொடி பத்து கிராம் எடுத்து எருமைப்பால் விட்டு வெண்ணெய் போல அரைத்து இதை கால் லிட்டர் எருமை பாலுடன் கலந்து தலைக்கு தேய்த்து பதினைந்து நிமிடம் ஊறிய பின் இளம் சூடான நீரில் குளித்து வந்தால்
தலை முடி அடர்த்தியாக வளரும் பொடுகுத் தொல்லை நீங்கும்
இளம் வயதில் ஏற்படும் வழுக்கை நோய் நம்மை வராமல் காக்கும்
அதிமதுரத்தை வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலையில் சொட்டை விழாது
மலச்சிக்கல் நீங்க
தேவையான பொருட்கள்
அதிமதுர பொடி 150 கிராம்
அரிசி திப்பிலி பொடி 50 கிராம்
இவைகளை ஒன்றாக கலந்து இதில் ஐந்து கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினந்தோறும் இரவு படுப்பதற்கு முன்பாக இதை சாப்பிட்டு வர தீராத மலச்சிக்கல் தீரும் மேலும் வயிறு சார்ந்த நோய்கள் அனைத்தும் நீங்கி நமக்கு நல்ல ஆரோக்கியத்தை உண்டாக்கும்.