இரவு நேரத்தில் பால் பருகுவது நல்லதா? கெட்டதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் பால் பருகுவது நல்லதா? கெட்டதா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!
உண்ணும் உணவுகளை விட பாலில் பல வித நன்மைகள் உள்ளது. பால் சுவையோடு இருப்பதுடன் சத்துக்களும் அதிகமாக நிறைந்துள்ளது. புரதம், மக்னீசியம் பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஆனால் இந்த காலகட்டத்தில் எத்தனை பேர் தினமும் பால் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலை குடிக்க விரும்புவதில்லை.
குறிப்பாக பெண்கள் பால் குடித்தால் குண்டாகி விடுவோம், முகப்பரு வரும் போன்ற கதைகளை சொல்லுவதுண்டு. சிலருக்கு காலையில் பால் குடிக்க பிடிக்கும். மற்றும் சிலருக்கு இரவில் குடிக்க பிடிக்கும்.
ஆனால் இதில் எது பால் குடிக்க சரியான நேரம்? என்று பலர் குழம்புகின்றனர். பால் குடிக்க சரியான நேரம் குறித்து பார்க்கலாம்.
இரவில் பால் குடிப்பது தூக்கத்தை தூண்டுகிறது மற்றும் உங்களுக்கு நல்ல தூக்கத்தை பெற உதவுகிறது. குறைவான செயல்பாடு காரணமாக உங்கள் உடல் இரவில் பாலில் இருந்து அதிகபட்ச கால்சியத்தை உறிஞ்சுகிறது.
ஒரு நாளில் நீங்கள் 2 முதல் 3 கப் பாலை எளிதாக குடிக்க முடிந்தாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். இதனால் காலை அல்லது இரவு எதாவது ஒரு வேளை குடித்தால் போதுமானது.
பால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் எலும்பு வலிமையை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. இது புரதம், கால்சியம், வைட்டமின் பி 12, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாகும்.
தொடர்ந்து தினமும் பால் குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளையும் தடுக்கிறது.