சியா விதை சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

சியா விதை சாப்பிட்டா உடல் எடை குறையுமா?

சால்வியா என்னும் தாவரத்தின் கருப்பு நிற விதைதான் இந்த சியா விதைகள் என்று அழைக்கப்படுகிறது. இது புதினா குடும்பத்தை சார்ந்தது. இந்த சியா விதைகளை பழகாலங்களிலிருந்தே பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் ஒரு ஸ்பூன் இந்த சியா விதைகளை சாப்பிட்டு வந்தாலே போதும் அன்றைய நாள் முழுவதும் உடலுக்கு நல்ல ஆற்றலை தரும் என்று கூறப்படுகின்றது. .

சியா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது வரை அனைத்து வேலைகளையும் இந்த சியா விதை செய்து வருகின்றது.

அந்தவகையில்  சியா விதைகள் எடை இழப்புக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதையும், இதனை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றியும் பார்ப்போம்.

எடை இழப்புக்கு எவ்வாறு உதவுகின்றன?

சியா விதைகள் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். இது தசையை வளர்ப்பதற்கும், இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்துவதற்கும், மற்றும் கொழுப்பை எரிப்பதற்கும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.

புரோட்டீன், நீங்கள் நீண்ட நேரம் பசி உணராமல் இருக்க உதவுகிறது. மற்றும் பசியைக் குறைக்கவும் உதவுகிறது.

மேலும் இது, உங்கள் கலோரி அளவையும் குறைக்கிறது.
 எவ்வளவு எடுத்து கொள்ளலாம்?

இரண்டு தேக்கரண்டி சியா விதைகளை சாப்பிடுவதால் உங்களுக்கு கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.

இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில், 40 சதவீதம் ஆகும். உயர் ஃபைபர் உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும், இதனால் நீங்கள் நீண்ட நேரம் பசி உணராமல் இருப்பீர்கள். எடை இழப்பு உணவைப் பின்பற்றும் போது, தினமும் 30 கிராம் ஃபைபர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்.

எப்படி எடுத்து கொள்ளலாம்? 

* உங்கள் சியா விதைகளை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். எல்லா விதைகளையும் போலவே, சியா விதைகளிலும் செரிமான தடுப்பான்கள் உள்ளன.

* இந்த செரிமான தடுப்பான்கள் அகற்றப்படும் போது, விதைகளின் முழு ஊட்டச்சத்து சக்தியையும் இதனால் வெளியிட முடியும்.

* மேலும், விதைகள் முளைக்கும் போது தான் அது நிகழ்கிறது. எனவே, சியா விதைகளை நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பு, அது நன்றாக முளைத்துள்ளதா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

* இதை நீங்கள் இரவு முழுவதும் ஊறவைக்கலாம் அல்லது சில சமயம் 20 நிமிடம் கூட ஊறவைக்கலாம். சியா விதைகளை ஊறவைக்காமல் அல்லது முளைக்க வைக்காமல் சாப்பிடுவதில் எந்தத் தீங்கும் இல்லை.