பெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் :
பெண்கள் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
* பெண்களை அதிகமாகத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்கிற எலும்புகள் மென்மையாகிற நோய்த் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவடையும்.
* உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பைப் பிரச்சினையும் படிப்படியாகக் குறையும்.
* உடலின் உள் உறுப்புகளுக்கும் நரம்புகளுக்கும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
* மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை நீங்க உதவும். இதயத்துக்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும்.
* தினமும் ஸ்கிப்பிங் செய்வதால், உடல் மற்றும் தண்டுவடம் நேராகி உயரமான தோற்றம் கிடைக்கும்.
* இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பு பலம் பெறும்.
* கை மற்றும் கால்களின் செயல் வேகம் அதிகரிக்கும். இது ஒரு முழு உடலுக்கான பயிற்சி. ஒரு மணி நேர ஸ்கிப்பிங் 1,300 கலோரிகளைக் குறைக்க உதவும்.
* பெண்களை அதிகமாகத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்கிற எலும்புகள் மென்மையாகிற நோய்த் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுவடையும்.
* ஸ்கிப்பிங் பயிற்சி செலவில்லாதது. எங்கும் எப்போதும் செய்யலாம்.
* ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும்.
* உடலின் சமநிலைத் தன்மை மற்றும் சுறுசுறுப்பை அதிகரிக்கும்.