அளவுக்கு மீறி தக்காளியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு பாதிப்புகள் இருக்கா?

அளவுக்கு மீறி தக்காளியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு பாதிப்புகள் இருக்கா?

ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடச் சமையலில் இடம் பெறும் தவிர்க்க முடியாத ஒரு பழம் தக்காளி. தக்காளியில் இரு வகைகள் உண்டு.

சமையலுக்கு ருசியை கொடுக்க அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது தக்காளி. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் தான்.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.

இருப்பினும் இதனை அளவோடு சேர்த்து கொள்வது நல்லது. இல்லாவிடில் இது பின்னடைவில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்துவதாக அமைகின்றது. 

அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது சில பாதிப்புகளும் உண்டாகும். அவை என்னென்ன பார்க்கலாம்.

* தக்காளியில் ஆசிட் இருப்பதனால் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது உடலில் ஆசிட் அதிகரித்து நெஞ்சு எரிச்சல், வாயுத்தில்லை , செரிமானப் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

* சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் பொட்டாசியம் உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கிறது. அந்த வகையில் தக்காளியில் பொட்டாசியம் நிறைவாகவே உள்ளது. அதோடு ஒசலேட் அதிகம் உள்ளதால் சிறுநீரக பாதிப்பை சந்திக்க நேரும்.

* குடல் எரிச்சல், குடல் வீக்கம் என குடல் பாதிப்புகள் ஏற்கனவே இருந்தால் தக்காளியை வழக்கத்தை விட குறைவாக பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் நீங்கள் அடிக்கடி வயிற்று மந்தம், அலர்ஜி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* தக்காளியை அதிகமாக உட்கொள்வது சோலனைன் எனப்படும் ஆல்கலாய்டு நிரம்பியிருப்பதால் மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி ஏற்படக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. திசுக்களில் கால்சியத்தை உருவாக்குவதற்கு சோலனைன் உதவியாக இருக்கிறது. எனவே சோலனைன் அதிகரிக்கும்போது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

* தக்காளியில் ஹிஸ்டமைன் எனப்படும் தோல் வெடிப்பு அல்லது ஒவ்வாமைக்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் தக்காளி ஒவ்வாமை இருந்தால், வாய், நாக்கு மற்றும் முகத்தின் வீக்கம், தும்மல் மற்றும் தொண்டை தொற்று போன்றவற்றை அனுபவிக்கலாம்.

* தக்காளி ஒவ்வாமை தோல் அழற்சியையும் ஏற்படுத்தும். நீங்கள் ஒவ்வாமை இருந்தால் தக்காளியை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தோலில் கடுமையாக அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.