கறிவேப்பிலையை சாப்பிட்டு பாருங்க எளிதில் எடையை குறைக்கலாம்!!
கறிவேப்பிலையை சாப்பிட்டு பாருங்க எளிதில் எடையை குறைக்கலாம்!!
கறிவேப்பிலை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. நறுமணத்தின் காரணமாக இந்தியாவில் வளர்க்கப்பட்ட கறிவேப்பிலை மரம் அதன்பின் அதன் தனித்துவமான சுவையின் காரணமாக சமையலுக்கு பயன்படுத்தினர். கறிவேப்பிலை ஏராளமான உணவுகளில் சேர்க்கலாம்.
இருப்பினும், கறிவேப்பிலை இலைகளின் தனித்துவமான சுவையைத் தவிர இதில் பலவிதமான பயன்கள் இருக்கிறது. கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், உணவு பொருள்களில் இருக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடக்கூடாது.
நாம் சாப்பிடும் உணவுகளோடு அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும். இந்த தொகுப்பில் கறிவேப்பிலையின் மருத்துவ பயன்களை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சத்துகள் :
கறிவேப்பிலையில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் எ, பி, சி, இ மற்றும் பி 2 போன்ற விட்டமின்களும் நிறைந்துள்ளது. கால்சியம் குறைபாடு நோய்களுக்கு சிகிச்சையளிக்க நாட்டுப்புற மருத்துவத்தின் ஒரு பகுதியாக கறி வேப்பிலையை பயன்படுத்துகின்றனர்.
உடல் பருமன் :
கறிவேப்பிலையில் இருக்கும் கார்பசோல் ஆல்கலாய்டுகள் எடையை அதிகரிக்கும் ஆற்றலுக்கு எதிராக செயல்பட்டு உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால், உடல் எடை குறையும். ஆரோக்கியமான உணவோடு கறிவேப்பிலை உட்கொண்டு வர விரைவாக எடை குறையும். மேலும் தினமும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களின் உடல் பருமன் எளிதில் குறையும்.
நீரிழிவு நோய் :
கறிவேப்பிலைக்கு இயற்கையாகவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு. மேலும் இதில் இருக்கும் தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி செய்யும் உறுப்புகளுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன மற்றும் ஃப்ரீ ரேடிகல்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கின்றன. ஆகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிடலாம்.
கிருமிகளை கொல்லும் :
தொற்றுநோய்களுக்கு கறிவேப்பிலையை இயற்கை சிகிச்சையாக பயன்படுத்தலாம். கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் நிறைந்துள்ளது. மேலும் அவை பாக்டீரியா எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
கறிவேப்பிலையில் உள்ள லினோலோல் கறிவேப்பிலைக்கு வாசனையைத் தருகின்றன. இவை பாக்டீரியாவைக் கொல்லும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது.
குமட்டல் நீக்குகிறது :
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் குமட்டல் பிரச்சினை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபட கறிவேப்பிலையை உபயோகப்படுத்தலாம்.
மேலும் இதில் அதிக அளவில் உள்ள நார்ச்சத்து செரிமான சுரப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. மேலும் இது குமட்டல், மற்றும் வாந்தியிலிருந்து விடுபட உதவுகிறது.
மலச்சிக்கல் :
வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க கறிவேப்பிலையை பயன்படுத்தலாம். உலர்ந்த கறிவேப்பிலையை அரைத்து மோரில் சேர்த்து வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கு வெறும் வயிற்றில் குடித்து வர சரியாகும்.
கண்பார்வை :
கறிவேப்பிலை கண்பார்வையை அதிகரிக்க பயன்படுகிறது . மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை உருவாவதை தடுக்கின்றன.
மன அழுத்தத்தைக் குறைக்க :
கறிவேப்பிலையின் எண்ணெய் மன அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது பதட்டம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தோல் வெடிப்புகள் குணமாகும் :
கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதை தீக்காயங்கள், காயங்கள் மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவற்றில் நேரடியாகப் பயன்படுத்தலாம். இவை எளிதில் புண்களை குணப்படுத்தும்.
முடி வளர்ச்சி :
கறிவேப்பிலை முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் முடி உதிர்வதற்கும், நரை முடி பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம். கறிவேப்பிலை சாறு பொடுகு மற்றும் தட்டையான உச்சந்தலையை சரி செய்ய உதவும்.
ஞாபக மறதி :
உணவில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் அல்சைமர் போன்ற ஞாபக மறதி கோளாறுகளைச் சரி செய்ய உதவுகிறது.
இரத்த சோகை நோய் :
இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் , அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. தினம் 10 கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.