தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? அதன் பயன் என்ன?

தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? அதன் பயன் என்ன?

உணவில் தினமும் நெய் சேர்த்து கொள்வது உடலை வலிமைப்படுத்தும். கெட்ட சக்திகளை வெளியேற்றவும், கண் பார்வையை மேம்படுத்தவும் நெய் உதவும்.

இந்திய உணவுமுறைகளில் நெய் முக்கிய பங்கு வகிக்கின்றது. பருப்பு சாதம், பொங்கல், சாம்பார் போன்ற உணவுகளில் நெய்யை மணக்க மணக்க ஊற்றுவது இந்தியரின் வழக்கம். நெய்யில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு உள்ளதாம்.

சரி வாங்க நெய் எடுத்துக்கொள்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

நன்மைகள்:-

* நெய் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் உள்ள தசைக்களை வலிமைப்படுத்தி உறுப்புகளின் செயல்பாட்டை கூட்டும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்று சொல்வார்கள். அது போல நெய்யை அளவாக எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.

* அதிகமாக உட்கொண்டால் வயிற்று போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம். நீங்கள் சிறு தானிய உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்றால் தாராளமாக நெய் சேருங்கள். இதுவே அரிசி சாதம் மற்றும் பருப்பு என்றால் சிறிய அளவில் நெய் சேர்த்து கொள்ளுங்கள்.

* குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதாக இருந்தால் அவர்கள் சாப்பாடு உண்ண ஆரம்பித்ததும் சேருங்கள். இருதய நோய் மற்றும் உடல் பருமனாக உள்ளவர்கள் நெய்யை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கொழுப்பை அதிகமாகி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

* அது போல நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

* நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாடு மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் இருக்க உதவும்.