தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா?

தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் தெரியுமா?

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் அதிகம் சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், விட்டமின் பி6, விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.

இதனை தினமும் 2 சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பயன்களை தருகின்றது.

அதிலும் தினசரி வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

* தினசரி இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

* வாழைப் பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு அதிக ஆற்றலைத் தர உதவுகிறது. காலப்போக்கில் உடலுக்கு தேவையான ஆற்றலானது மெதுவாக உறிஞ்சப்படும்.

* வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் தசைபிடிப்பை தடுக்க முடியும். ஏனெனில் வாழைப்பழங்களில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது. இது தசைகள் விரைவாக சுருங்காமல் இருக்க உதவி செய்கிறது. 

* நெஞ்செரிச்சலால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள் வாழைப்பழங்களை சாப்பிட்டு வரலாம். வாழைப்பழம் வயிற்றில் உள்ள அமிலத்தை நடுநிலையாக்குவதன் மூலம் உடனடி நிவாரணம் வழங்க உதவுகிறது.

* வாழைப்பழத்தில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக ரத்த சோகை உள்ளவர்கள் செவ்வாழை பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.

* குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. வாழைப்பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.