உடல் எடையை குறைத்து, நல்ல தூக்கத்தை பெற இந்த பால் அருந்துங்க!

உடல் எடையை குறைத்து, நல்ல தூக்கத்தை பெற இந்த பால் அருந்துங்க!

தினமும் பால் குடிக்க வேண்டும் என்று நினைத்தாலே அலர்ஜியாக இருக்கும். அதுவும் இந்த லாக் டவுன் சமயத்தில் வீட்டில் சும்மா இருந்தே சலிப்பாக இருக்கும். அதனால் ஏதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.

அதுமட்டுமல்லாமல் சிலருக்கு எப்போதும் தூங்கி தூங்கி சரியாக இரவு நேரங்களில் தூக்கமே வருவது இல்லை. அப்படி பட்டவர்கள் இரவு தூங்குவதற்கு 1 மணிநேரம் முன் பாதாம் பால் தயாரித்து குடித்து விட்டு தூங்கி பாருங்க நல்ல தூக்கம் வரும்.

ஏனென்றால் பாலில் உள்ள வைட்டமின் ஈ, நல்ல தூக்கத்தை தர உதவுகிறது. அதிலும் பாதாம் பாலை குடித்து விட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.

அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனென்றால் ஒரு கப் பாதாம் பாலில் 60 கலோரிகள், மட்டுமே உள்ளன. ஆகவே இந்த பாலை பருகினால் உடலில் கலோரிகள் அதிகரிக்காமல் இருக்கும். இதனால் உடல் எடையை குறைக்க முடியும்.

மேலும் இதயம், எலும்புகள், தசைகள் போன்றவற்றையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. சரி, இவ்வளவு நன்மைகள் நிறைந்த பாதாம் பாலை எப்படி தயாரிப்பது என்று இனி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் – 1/4 லிட்டர்
சர்க்கரை – தேவையான அளவு
பாதாம் – 5
முந்திரி – 5
ஏலக்காய்த் தூள் – சிறிதளவு
 
செய்முறை :

முதலாவது 3 பாதாமை சூடு தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பதினைந்து நிமிடம் கழித்து இதன் தோலை உரித்து சிறிது பால், முந்திரி சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளுங்கள்.

அதன்பின் மீதியிருக்கும் பாதாமை சிறியதாக சீவிக் கொள்ளுங்கள். அதன் பின் பாலை நன்கு காய்த்து அதில் பாதாம், முந்திரி விழுது, சர்க்கரை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

இறக்கிய பிறகு அதில் சீவிய பாதாம், ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்றாக கலந்து ஆறவிடுங்கள். ஆறியபின், பிரிட்ஜில் வைத்து குளிரவைத்துப் பரிமாறுங்கள். பிரிட்ஜில் வைக்க விருப்பம் இல்லாதவர்கள் அப்படியே குடிக்கலாம்.